ஊடகவியலாளர் கீத்நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டவிவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநரும் முன்னாள் இராணுவ பிரதானியுமான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல்குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை, குற்றப்புலனாய்வு பிரிவினர் இவரை கைதுசெய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊடகவியளார் கீத்நொயர் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெகிவளையில் கடத்தப்பட்டு மோசமாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.