பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களின்  தலைவர்களை சந்தித்தவேளையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தை பலப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, எவர் வேண்டுமென்றாலும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முழுமையான அமைச்சரவை மாற்றம் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.