அமெரிக்காவின் கலிபோர்னியா மானிலத்திலன் தெற்கு பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12.30 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 5.3 எனப் பதிவாகியுள்ளது.

இந் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பலர் தங்களது உடைமைகளை இழந்துள்ளதுடன் பதற்றத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்படப்போவதை கையடக்கத் தொலைபேசியில் உடன்பெற்றுக்கொள்ளக்கூடிய அப் ஒன்றின் உதவியால் பெரும் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த அப்பினை கண்டு பிடித்த ஜோனஸ் என்பவர் இதுகுறித்து கருத்து தெறிவிக்கையில்,

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.

நான் அறிமுகப்படுத்திய அப்பின் செயற்பாட்டால் நிலநடுக்கம் ஏற்பட சிறிது நேரதிற்கு முன்பே கையடக்கத்தொலைபேசிக்கு தகவல் கிடைத்ததன் காரணமாக பெரியளவில் உயிர்ச் சேதங்க்ள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியாவின் தென்குப்பகுதியில் உள்ள  சேன்டா குறுஸ் தீவுப் பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.