பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு : நால்வர் பலி!!!

Published By: Digital Desk 7

06 Apr, 2018 | 11:45 AM
image

துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஒஸ்மான்காசி பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தினுள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த குறித்த  பல்கலைகழக மாணவர்  அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதில்  பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ஒரு விரிவுரையாளர் மற்றும் ஒரு பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு பொலிஸ்  தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் தப்பிக்க முயற்சிக்காமல் பொலிஸாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இத் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். 

பல்கலைகழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52