சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்றத்தின் கடும் தீர்ப்பு 

Published By: Priyatharshan

06 Apr, 2018 | 10:08 AM
image

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014 ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக தனக்கு அறிமகமான ஆசிரியர் ஒருவரிடம் கணித பாட வினாத்தாள்களை வாங்கித்தர முடியுமா என கேட்டுள்ளார்.

அதற்கு குறித்த ஆசிரியர் வாங்கித் தருவதாக இரண்டு தடவை ஏமாற்றியுள்ளார். மூன்றாவது தடவையும் குறித்த சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்று வினாத்தாள்களை கேட்ட போது வாங்கி வரவில்லை என கூறியதோடு தனது காணியில் வேலை செய்பவர்களுக்கு தேனீர் ஊற்றிக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

சிறுமியும் தேனீர் ஊற்றுவதற்காக வீட்டிற்குள் சென்ற சந்தர்ப்பத்தில் எதிரியாக இனங்காணப்பட்ட ஆசிரியர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த எதிரியை கைதுசெய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இதன் பிரகாரம் கடந்த 2017 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 18 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு நேற்று முன்தினம் 04.04.2018 ஆம் திகதி தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தது.

வழக்கினை விளங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியை குற்றவாளியாக கண்டதுடன் இருபது வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் அபராதமாக ஒரு இலட்சம் ரூபாவும், அதனை செலுத்தத்தவறின் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈட்டு பணமாக ரூபா ஐந்து இலட்சம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த நஷ்ட ஈட்டு பணத்தை செலுத்தத்தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் நீதிபதி தனது தீர்ப்பிலே தொடர்ந்தும் இந் நீதிமன்றம் இவ்வகையான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி தீர்ப்பளிக்கின்ற போதிலும் சமூகத்தில் இவ்வகையான குற்றச்செயல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் சமூகத்தில் கௌரவமான புனிதமான தொழில்களில் இருந்து கொண்டு இவ்வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், ஈடுபட நினைப்பவர்களிற்கும் இத்தீர்ப்பின் மூலம் எச்சரிக்கை விடுப்பதாகவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கை அரச சட்டவாதி ஐ.எம்.எம் பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33