தென்கொரியாவின் சியோல் நகருக்கு அருகில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரு விமானிகள் பலியானதாக  அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

தென்கொரியாவின் சியோல் பகுதியில் இன்று   ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ விமானம் ரோந்துப்பணி முடிந்து இராணுவ தளத்துக்கு திருப்பிக் கொண்டிருந்த போது அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த விமானம் அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்திருக்கலாம் எனவும் தென்கொரிய விமானப்படை அதிகாரி ஒருவர் உடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். 

விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.