அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது 

Published By: Priyatharshan

05 Apr, 2018 | 02:01 PM
image

(இரோஷா வேலு) 

அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் நால்வர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வருஸாவ வீதிக்கருகில் வைத்து கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்ற சந்தேகத்தின் பேரிலும் அதேபோல் மார்ச் மாதம் 26 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டொன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டிலும் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு பிரவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் அத்துருகிரிய மற்றும் ஹோகந்தர பிரதேசங்களின்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே 24, 34,36 மற்றும் 37 வயதுடைய அத்துருகிரிய, தல்பே மற்றும் ஹோகந்தர பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு குறித்த நால்வரையும் கைதுசெய்யும் வேளையில் அவர்களிடமிருந்து குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும், ரீ  56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியொன்றும்  துப்பாக்கியின் ரவைகள் 12 உம், மகசின் 1, கத்தி 3, வாள்கள் 3, தலைக்கவசம் 2, பாதுகாப்பு கவசம் 2, கேரள கஞ்சா 2 கிலோ மற்றும் கேரள கஞ்சாவை விற்பனைசெய்து கிடைக்கப்பெற்ற 79800 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் இன்று கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17