பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இரவு 9.30 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், இதுதொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் காலை முதல் இடம்பெற்றது.

இதன்போது ஒவ்வொரு கட்சியினரும் அமைச்சர்களும் வாக்கெடுப்புக் குறித்த பல கருத்தக்களையும் தெரிவித்து விவாதித்து வந்த நிலையில், தற்போது வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரித்து எவ்வளவு வாக்குகளும் எதிராக எவ்வளவு வாக்குகளும் கிடைக்கும் என்பதைப் பொறுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையவுள்ளன.