(இராஜதுரை ஹஷான்)

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் அரசியல் இராஜதந்திரம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. கூட்டு எதிர்கட்சியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றதாகவே காணப்படுகின்றது.தேசிய அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளையும் மீறி செயற்படுவார் என்றவிடயத்திற்கு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.

எவ்வித பக்கச்சார்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்தி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவில்லை. நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது. 

பிரதமர் பதவி மோகம் கொண்டவர் அவர் மனச்சாட்சியுடன் செயற்படுபவராக இருந்தால் மத்திய வங்கியில் பிரதமர் தலைமையில் இடம் பிணைமுறி மோசடியின் பின்னர் எவ்வித அழுத்தங்களும் இன்றி பதவி விலகியிருப்பார். ஆனால் இவை யாவும் நடைமுறையில் இடம் பெறவில்லை.

பாராளுமன்றத்தில் உள்ள பெரரும்பான்மையான உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல , அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே காணப்படுகின்றனர். மக்களின் அபிலாசைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதை தேசிய அரசாங்கம் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது என தெரிவித்தார்.