(எம்.எப்.எம்.பஸீர்)

நபரொருவரிடம் இருந்து 210 மில்லியன் ரூபாவை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜகிரிய நபர் ஒருவரைத் தேடி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

கொஸ்வத்த, நாவல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு செய்த முறைப்பாடு தொடர்பில் வணிக குற்ற விசாரணை பிரிவு முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே ராஜகிரிய,  ஸ்கைப் கார்டன் ரெசிடென்ஸியில் வசித்து வந்ததாக கூறப்படும் சஞ்ஜீவ டி சில்வா பண்டித்தரத்ன என்பவரை குற்றப் புலனயவுப் பிரிவு தேடி வருகின்றது.

இந்நிலையில் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ் தலைமையகம் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0112 395 248 எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவின்  வணிக குற்ற விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கோருகின்றது.