உணவு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அவசர எச்சரிக்கை.!

Published By: Robert

04 Apr, 2018 | 02:40 PM
image

பண்டிகைக் காலம் இம்மாதம் முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாவனையாளர்களின் நலன்கருதி நாடளாவிய ரீதியில் உணவு தொடர்பில் பரிசோதனை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கச் செயளாலர் எம்.பாலசூரிய  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண்டிக்காலக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. எனவே நாடாளாவிய ரீதியில் காணப்படுகின்ற உணவு விடுதிகளிலும் உணவு பதப்படுத்தல் நிறுவனங்களிலும் மற்றும் பொது சந்தைகளிலும் மக்கள் பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். 

அதன் முதற்கட்டமாக நாடு பூராகவும் 2500 பொது சுகாதார பரிசோதகள் உணவு பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் வேலைத்திட்டத்தை நாம் இம் மாதம் முதலாம் திகதிலேயே ஆரம்பித்துள்ளோம். உணவு பரிசோதனையின் போது பதணிடப்பட்ட உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தேங்காய் எண்ணைய் , சீனி மற்றும் மா வகைகள் போன்வற்றில் விஷேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. பாவனையாளர்களால் அதிகம் நுகரப்படும் அதேவேளை கலப்படம் அதிகம் இடம்பெறுவதோடு, கலாவதியான பின்னரும் விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்களாக இவை இனங்காணப்பட்டுள்ளன. 

எனவே மக்கள் இது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஹோட்டல்களிலும் இதேபோன்ற சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனினும் நுகர்வோர் தங்கள் பாதுகாப்பு கருதி எந்த பொருளை வாங்கும் போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04