தந்தை உள்­ளிட்ட குடும்ப அங்கத்­த­வர்­களால் கடந்த 17 வரு­டங்க­ளாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்கு உட்­ப­டுத்­தப்பட்டு வந்த 23 வய­தான யுவதி ஒருவர் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக சந்­தேக நபர்கள் ஐவரை பயா­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தனக்கு ஐந்து வய­தாக இருக்கும் போது முதலில் தனது தந்­தையால் தான் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அதன்­பின்னர் தனது மூத்த சகோ­த­ர­னி­னாலும், மைத்­துனன், மைத்­துனின் சகோ­தரன், சித்­தியின் மகன் ஆகியோர் தன்னை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் யுவதி பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே அந்த ஐவ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்த சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

பயா­கல பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்ற 23 வய­து­டைய யுவதி ஒருவர், அங்கு மகளிர் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரின் கையைப் பிடித்­த­வாறு அழுது புலம்பி தனது சோகக் கதையை கூறி­யுள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த யுவ­தியை பயா­கல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் துஷார சில்­வா­விடம் பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் அழைத்துச் சென்­றுள்ளார்.

இதன் போது பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யி­டமும் குறித்த யுவதி தனது சோகக் கதையை தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து யுவ­தியின் முறைப்­பாடு அவ­ரது வாக்குமூலத்­துக்கு அமை­வாக பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் பதி­னா­றரை பக்­கங்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. தான் தற்­போது திரு­மணம் முடித்­துள்ள நிலையில் தனது கணவர் தன்னை தற்­போது சந்­தேகப் பட ஆரம்­பித்­து­விட்­ட­தா­கவும் அத­னா­லேயே தான் பொலிஸ் நிலையம் வந்­த­தா­கவும் குறித்த யுவதி அந்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து குறித்த யுவ­தியை விசேட வைத்­திய பரி­சோ­த­னை­க­ளுக்­காக களுத்­துறை நாகொட வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பிய பொலிஸார் அந்த யுவ­தியை சிறப்பு மன நல வைத்­தியர் ஒரு­வ­ரி­டமும் முன்­னி­லைப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே சந்­தே­கத்தின் பேரில் முறைப்­பாட்டில் பெய­ரி­டப்­பட்­டுள்ள ஐவ­ரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.