வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதி 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று  (04.04.2018) அதிகாலை 3.30 மணியளில் இடம்பெற்றுள்ளது.

கற்குழியில் வசித்து வரும் 17 வயதுடைய சுபலோசன் என்ற பாடசாலை மாணவன் நேற்றையதினம் குடும்பத்தாருடன் சிறு கருத்து முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் வீட்டை வீட்டு வெளியேறிச் சென்றுள்ளார். 

இந்நிலையில், வவுனியா தேக்கவத்தை பகுதியில்  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் சில தினங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாக மாணவனது சக நண்பர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் ரயிலுடன் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக மாணவனது சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.