பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகி இருக்க தீர்மானித்துள்ளது.

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.எச்.எம். பௌசி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கப் போவதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அடுப்படையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.