ஏழு  வயது சிறுவன் ஒரு­வனைப் பயன்­ப­டுத்தி பாலியல் இன்பம் பெற்­ற­தாகக் குற்றம் சாட்­டப்­பட்ட  வவு­னியா அண்­ணா­ந­கரைச் சேர்ந்த இளைஞன் ஒரு­வ­னுக்கு வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி  அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர் 7 ஆண்­டுகள் சாதா­ரண சிறைத்­தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா தண்­டமும் விதித்துத் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

Child abuse

கடந்த 2004 ஆம் ஆண்டு வளர்ப்பு மீன் விற்­பனை செய்யும் கடை­யொன்றில், அதனை நிர்­வ­கித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவன், அவ­ருக்கு அறி­மு­க­மான 7 வயது சிறு­வனை பாலியல் செய்­கைக்கு உட்­ப­டுத்தி இருந்தார். 

இத­னைத்­தொ­டர்ந்து இரு­கு­டும்­பங்­க­ளுக்கும் இடையில் அடி­தடி பிரச்­சினை ஏற்­பட்டு, விடயம் வவு­னியா பெண்கள் சிறுவர் குற்­றத்­த­டுப்பு  பொலி­ஸா­ரிடம் முறை­யி­டப்­பட்ட நிலையில் விசா­ர­ணை­களின் பின் சட்­டமா அதிபர் திணைக்­களம் குறித்த இளை­ஞ­னுக்கு எதி­ராக பார­தூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்ற குற்­றச்­சாட்­டுடன் வவு­னியா  மேல் நீதி­மன்­றதில் வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தது.

இந்த வழக்கில் அரச சார்பில் அரச சட்­ட­வாதி நிஷாந் நாக­ரட்ணம் ஆஜராகி­யி­ருந்தார் எதிரி சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மொகமட் சபீஸ், அன்ரன் புனி­த­நா­யகம் ஆகியோர் ஆஜராகி­யிருந்­தனர். 

விசா­ர­ணையின் முடிவில் இளை­ஞனைக் குற்­ற­வா­ளி­யாகக் கண்ட நீதி­பதி அவ­ருக்கு 7 வருட சிறைத் தண்­டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா தண்டமும் நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது.