பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலை 8.59 இற்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய காலை 8.30 இற்கு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.