இறுதி தீர்மானம் இன்னும் சில நிமிடங்களில்.!

Published By: Robert

04 Apr, 2018 | 08:48 AM
image

கூட்டு எதிர்க்­கட்­சி­யினால் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இறுதித் தீர்­மானம் குறித்து ஆராயும் முக்கிய சந்திப்பு நேற்று இடம்­பெற்­றது. நேற்று காலை 10 மணிக்கு பாரா­ளு­மன்றில் உள்ள எதிர்க்­கட்சி தலை வர் அலு­வ­ல­கத்தில் எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில்  இந்த சந்­திப்பு  இடம்­பெற்­றது. 

நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் வெவ்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்ற நிலையில் காலையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் எந்­த­வித தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­டாது  காலை 11.30 மணி­ய­ளவில் நிறை­வுக்கு வந்­தது.

 இதனை அடுத்து  எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் சுமந்­திரன் ஆகியோர் அவ­ச­ர­மாக ஜனா­தி­ப­தியை சந்­தித்­தனர். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இந்த சந்­திப்பு  இடம்­பெற்­றது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து இந்த சந்­திப்பில் கலந்­து­ரை­யாடப் பட்­டுள்­ள­துடன் அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்தும் தேசிய அர­சாங்­கத்தை கையாள்­வதன் செயற்­பா­டுகள் குறித்தும் ஜனா­தி­ப­திக்கும் எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கும் இடையில் இடம்­பெற்­றுள்­ளது. தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் ஆரோக்­கி­ய­மாக கொண்­டு­செல்­லப்­ப­டு­வது குறித்து இரு­த­ரப்­பி­னரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். 

இதனை அடுத்து நேற்று பிற்­பகல் 2 மணிக்கு மீண்டும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் பாரா­ளு­மன்­றத்தில் கூடி­யது. பிற்­பகல் 2 மணி தொடக்கம் 5 மணி வரையில் இடம்­பெற்ற இந்த சந்­திப்பின் போதும் எந்­த­வித தீர்­மா­னமும் எடுக்­காது முடி­வுக்கு வந்­துள்­ளது. 

நேற்­றைய தினம் சுமார் ஐந்து மணி­நேரம் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்ற போதிலும் நேற்­றைய தினமும் பிரே­ரணை குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எந்தத் தீர்­மா­னத்­தையும் எடுக்­க­வில்லை.  இந்­நி­லையில் இன்­றைய தினம் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும் எனவும் காலை 10 மணி­ய­ளவில் மீண்டும் கூட்­ட­மைப்பின் பார­ளு­மன்ற குழுக் கூட்டம் கூடும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது. 

இந்த சந்­திப்பு குறித்து  எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் குறிப்­பி­டு­கையில்,

நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இது­வ­ரையில் எந்த தீர்­மா­னத்­தையும் முன்­னெ­டுக்­க­வில்லை. இந்­நி­லையில் பிரே­ரணை விவ­காரம் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்தோம். அதன் பின்னர் மீண்டும் கூட்­ட­மைப்பின் பாராளுமன்ற குழு கூடியும் கலந்துரையாடினோம். எனினும் இறுதித் தீர்மானம் ஒன்றை முன்னெடுக்கவில்லை. நாளைய தினமும்  (இன்று ) தீர்மானம் எடுக்க எமக்கு  கால அவகாசம் உள்ளது. ஆகவே மீண்டும் கூடி நாம் ஆராய்வோம் எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47