இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தகத்திற்கான பாராளுமன்றக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயவுள்ளதுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளனர்.