தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்த முயன்றதற்காக அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை குறைக்கவேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் மூவரிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் அளவுக்கதிகமானவை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் கிரேக் டையர் தெரிவித்துள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடைகளிற்கு மாற்றீடான நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தடை குறித்த அறிவிப்பை இடைநிறுத்தவேண்டும் அல்லது குறைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மூன்று வீரர்களிற்கும் உள்ளுர் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தடைகள் அளவுக்கதிகமானவை இவ்வாறான சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவ்வேளை இவ்வாறான கடும் தடைகள் விதிக்கப்படவில்லை எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.