அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் புட்டின் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசியில் உரையாடியவேளையிலேயே டிரம்ப் இந்த அழைப்பை விடுத்தார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்காகவே டிரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளார் என தெரிவித்துள்ள ரஷ்யா எனினும் பின்னர் உருவான நெருக்கடிகளால் இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இரு ஜனாதிபதிகளும் தொலைபேசியில் உரையாடிய வேளை வொஷிங்டனில் உச்சிமாநாடொன்றை நடத்த தீர்மானித்தனர் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளை மாளிகையின் பேச்சாளர் புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிசெய்யாத அதேவேளை இரு ஜனாதிபதிகளும் எங்கு சந்திக்கலாம் என்பது  குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.