பாக்கிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு கிறிஸ்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தானில் சிறுபான்மை மதத்தவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரிக்சோவில் பயணம் செய்துகொண்டிருந்த குடும்பத்தினர் மீது மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள்  துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பெண்மணியொருவர் மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது திட்டமிடப்பட்ட தாக்குதலாக சந்தேகிப்பதாகவும்  இதுவொரு பயங்கரவாத தாக்குதல்  எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியொன்றில் உள்ள தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.