தானாக விலக வேண்­டுமா அல்­லது பத­வியை பறிக்க வேண்­டுமா?

Published By: Robert

03 Apr, 2018 | 11:16 AM
image

கௌர­வ­மாக பத­வியை துறக்க   வேண்­டுமா அல்­லது அனை­வரும் எதிர்த்து அவரை நீக்க வேண்­டுமா என்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தீர்­மா­னிக்­க­ வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார். 

அர­சாங்­கமே பிர­த­மரை எதிர்த்து அணி­சேர்ந்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

நாளைய தினம் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­ட­வுள்ள நிலையில் கூட்டு எதிர்க்­கட்­சியின் கருத்­தினை கேட்­ட­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில் 

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட தினத்தில் இருந்து அடுத்த ஆறு ஆண்­டு­களில் இலங்­கையில் பாரிய மாற்றம் ஒன்று காணப்­பட்­டது. மிகக் குறு­கிய காலத்தில்  தனது இலக்கை அடைந்த பெருமை எமக்கு இருந்­தது. எமது ஆட்­சியில் பொரு­ளாதார திட்­டங்கள், தேசிய பாது­காப்பு மற்றும் இன நல்­லி­ணக்கம் என்­பன மிகச்­ச­ரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நாடு முழு­வதும் அபி­வி­ருத்­திகள் இடம்­பெற்­றன. சர்­வ­தேச நாடு­களின் உத­வி­களும் காணப்­பட்­டன. எனினும் யுத்­தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பகு­தி­களில் எதிர்­பார்த்த அளவு அபி­வி­ருத்­திகள் இடம்­பெ­ற­வில்லை என்­பதை நாம் மறுக்­க­வில்லை. 

எனினும் அதற்கு பல்­வேறு புறக் கார­ணிகள் இருந்­தன. எவ்­வாறு இருப்­பினும் வடக்கில் நாம் சரி­யான தீர்­வு­களை வழங்கி இலங்­கையின் இன ஐக்­கி­யத்தை பலப்­ப­டுத்தும் நல்ல திட்­டங்­களை வைத்­தி­ருந்தோம். அதற்­க­மைய அடுத்த அடுத்த சில ஆண்­டு­களில் தீர்­வு­களும் அபி­வி­ருத்­தி­களும் கிடைத்­தி­ருக்கும். 

எனினும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றமே இன்று நாட்­டினை பாரிய நெருக்­க­டிக்கு உள்­ளா­க்கி­யுள்­ளது. அபி­வி­ருத்­திகள் அனைத்தும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. தொழில் வாய்ப்­புகள் இல்லாது எமது சமூ­கமே நெருக்­க­டிக்குள் தள்­ளப்பட்­டுள்­ளது. முத­லீ­டுகள் தடைப்­பட்­டுள்­ளன, உற்­பத்­திகள் தடைப்­பட்­டுள்­ளன, வெறு­மனே சர்­வ­தேச இறக்­கு­ம­தி­களை நம்­பியும் வரி­களை நம்­பி­யுமே இந்த அர­சாங்கம் ஆட்­சி­யினை கொண்டு நடத்­து­கின்­றது. தேசிய அர­சாங்­கத்தில் பாரிய நெருக்­க­டிகள் உள்­ளன. பிர­தான இரண்டு கட்­சி­க­ளுமே மோதிக்­கொள்ளும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­மை­யி­லேயே நாம் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்­துள்ளோம். 

பிர­த­ம­ருக்கு எதி­ராக நாம் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை  வெற்றி கொள்வோம் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. இன்று சகல தரப்­பி­னரும் பிர­த­ம­ருக்கு எதி­ராக அணி­கொண்­டுள்ள நிலையில் பிர­த­மரால் வெறு­மனே ஐக்­கிய தேசியக் கட்­சியை வைத்­து­கொண்டு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வெற்­றி­கொள்ள முடி­யாது. தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சியே பிர­த­மரை எதிர்த்து நிற்­பதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பத­வியில் இருந்து நீங்க சொல்­வதும் வெளிப்­ப­டை­யா­கி­யுள்­ளது. 

ஆகவே இதற்கு மேலும் பிர­த­மரின் செயற்­பா­டு­களை  வெளிப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. ஆகவே பிர­தமர் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்பதே எமது கோரிக்­கை­யாக உள்­ளது. இன்றும் நாளையும் அவ­ருக்­கான கால அவ­கா­சத்தை எடுத்­து­கொள்ள முடியும். இந்த கால அவகாசத்தில் அவராக  பதவியை துறக்க விரும்பினால் அதனை முன்னெடுக்க முடியும். இல்லையேல் நான்காம் திகதியுடன் அவரது பதவி பறிக்கப்படும். ஆகவே ரணில் விக்ரமசிங்க தானாக பிர தமர் பதவியை துறக்கின்றாரா அல்லது அவரது பதவியை பிடுங்க வேண்டுமா என் பதை அவரே தீர்மானிக்க வேண்டும் என வும் அவர் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46