12 மணி­நேர விவா­தத்தின் பின்னர் வாக்­கெ­டுப்பு.!

Published By: Robert

03 Apr, 2018 | 10:16 AM
image

தேசிய அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்­புக்­குள்­ளா­கி­யுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நாளை புதன்­கி­ழமை விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட்டு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நாளை இரவு 9.30 மணிக்கு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

நாளை காலை 9.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலைமையில் கூட­வுள்­ள­துடன் சபையின் தினப்­ப­ணிகள் நிறை­வ­டைந்த பின்னர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை 12 மணி­நேரம் விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வுள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் அர­சியல் ரீதி­யாக பெரு­ம­ளவில் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டது. இதன்­படி ஆரம்­பத்தில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கட்­சியின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து  நீக்க வேண்டும் என கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. கட்­சிக்குள் மறு­சீ­ர­மைப்பு பணி­களை துரி­த­மான முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் கூறப்­பட்­டது. 

இவ்­வாறிருக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்டு வந்­தது. குறித்த பிரே­ர­ணை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் 55 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­க­ளுடன் கைய­ளிக்­கப்­பட்­டது. 

இதன்­பி­ர­காரம் கூட்டு எதிர்க்­கட்­சியின் 52 உறுப்­பி­னர்­களும் சுதந்­திரக் கட்சி சார்­பாக இரா­ஜாங்க அமைச்சர் ரி.பி. ஏக்­க­நா­யக்க, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்­சி­நி­லமே மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் ஆகி­யோரும் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குறித்த பிரே­ர­ணையில்  கைச்­சாத்­தி­ட­வில்லை. 

தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி பெரும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பல்­வேறு கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களையும் நடத்தி வரு­கின்­றது. அதே­போன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்ளும் பல­மட்ட சந்­திப்­புகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு அப்பால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மை­யிலும் பல்­வேறு மட்ட பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

அதே­போன்று கூட்டு எதிர்க்­கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒரு சில­ரு­டனும் சுதந்­திரக் கட்­சி­யு­டனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் பல்­வேறு பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது. 

 பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக வாக்­க­ளிக்க போவ­தாக சுதந்­திரக் கட்­சியின் ஒரு­சி­லரும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினரும்  அறி­வித்­துள்­ளனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­த­ம­ருக்கு ஆத­ரவு வெளி­யிடும் என கட்சி வட்­டார தக­வல்கள் தெரி­வித்­தாலும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. 

எவ்­வா­றா­யினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நாளை புதன்­கி­ழமை விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வுள்­ளது. 

இதன்படி நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடி வாய்மூல வினாக்களுக்கான விடை உட்பட தினப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் நம்பிக்கை யில்லா பிரேரணையின் மீதான விவாதம் நடத்தப்படும். 

அதன்பின்னர் இரவு 9.30 மணிக்கு வாக் கெடுப்பு நடத்தப்படும். இதன்போது தனி நபர் பெயர் அழைத்து வாக்கெடுப்பு நடத் தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01