மிகவும் சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்திய ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வன்னி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட பத்து இலட்சம் ரூபா  பெறுமதியான முதிரை மரக்குற்றிகளையே கொடிகாமம் பொலிசார் இன்று காலை  கைப்பற்றியுள்ளனர். 

கொடிகாமம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வன்னி பகுதியில் இருந்து டிப்பர் வாகனமொன்றில் சல்லி கற்களினுள் 30 முதிரை மரக்குற்றிகள் மறைத்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மிருசுவில் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்துடன் மரக்குற்றிகளை கொடிகாமம் பொலிசார் கைப்பற்றினர்.

இதன்போது துடன் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.