ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழு பிர­தமர் தலை­மையில் இன்று கூடு­கின்­றது.!

Published By: Robert

02 Apr, 2018 | 10:30 AM
image

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை தோற்­க­டிப்­பது  குறித்து ஆராய இன்று மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­குழு பிர­தமர் தலை­மையில் கூடு­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­க­ளையும் தனித்­த­னியே சந்­தித்து தனது நிலைப்­பாட்­டை பிர­தமர் வெளிப்­ப­டுத்­துவார் எனவும் கூறப்­ப­டு­கின்­றது. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க பிர­தமர் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் கடு­மை­யான முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.  கடந்த வாரங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்­டங்கள், ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­படும் பங்­காளிக் கட்­சி­களின் தலைவர்களுடன் சந்­திப்­புகள் என இடம்­பெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் அக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.  இன்று பிற்பகல் 2 மணிக்கு அல­ரி­மா­ளி­கையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் சகல உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  இரா­ஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா  கூறு­கையில்,

பிர­த­ம­ருக்கெதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கட்­டா­ய­மாக தோற்­க­டிக்க வேண்டும். தேசிய அர­சாங்­கத்தை குழப்பி அதன் மூலம் மீண்டும் குடும்ப ஆட்­சி­யைக் கொண்­டு­வர முயற்­சிக்கும் மஹிந்த அணி­யினர் பாரிய சதித்திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் முரண்­பா­டுகள் உள்­ளன எனக் கூறியும் ஆத­ரவு இழக்­கப்­ப­டு­வ­தாக பொய்­யான கருத்­துக்­களை கூறியும் அர­சாங்­கத்­தினுள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­றனர். எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி பல­மாக உள்­ளது. எமது உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒரே நிலைப்­பாட்டில் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒருசிலர் பிர­த­ம­ருக்ெகதி­ராக கருத்­துக்­களை கூறிய போதிலும் கட்­சியின் இறுதி நிலைப்­பாடு அது­வல்ல. ஜனா­தி­ப­தியோ பொதுச்­செ­ய­லா­ளரோ கட்­சியின் நிலைப்­பாட்டை இன்னும் முன்­வைக்­க­வில்லை. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இன்னும் தமது நிலைப்­பா­டு­களை கூற­வில்லை. இன்றும் அவர்கள் அர­சாங்­கத்தை காப்­பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றனர். எனவே அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் தரப்புக்கள் அதி­க­மாகும். 

ஆகவே பிர­த­ம­ருக்கெதி­ராக கொண்­டு­வரப்பட்டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாம் தோற்­க­டிப்போம். இந்­நி­லையில் நாளை (இன்று ) ஐக்­கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் கூடுகின்றது. காலையில் நாம் சந்திப்புகளை நடத்து வோம். ஐக்கிய தேசிய முன்னணியின் சகல தலைமைகளும் பாராளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார் கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27