எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பான அறிவிப்பை முன்னாள் பாதுகாப்புச் செயலா ளர் கோத்தபாய ராஜ பக் ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வெளியிடவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. இதற்கேற்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பலரிடம் இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தூது அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாட விரும்புவதாக கோத்தபாய ராஜபக் ஷவின் சார்பில் சில தலைவர்களுக்கு தூது அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையினால் தூய்மையான நாட்டினை உருவாக்க வேண்டியது அவசியமாகின்றது. எனவே அந்தப் பணியினை தன்னால் முன்னெடுக்க முடியுமென்றும் அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருமாறும் கோத்தபாய ராஜபக் ஷ கோருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விரைவில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.