இலங்கை மின்­சார சபையின் திருத்­தப்­ப­ணிகள் கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணி­நேர மின்­வெட்டு அமுல்­ப­டுத்தப் பட­வுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட மின்­அத்­தி­யட்­சகர் பணி­மனை தெரிவித்­துள்­ளது.

power cut

இன்று 19.11.2015ஆம் திகதி திரு­மலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அரு­ண­கிரி வீதி, பூம்­புகார், லொயிட்ஸ் அவன்யூ, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்­ன­ஊ­றணி, பெரி­ய­ ஊ­றணி, இரு­த­ய­புரம், கொக்­குவில், ஞானசூரியம் சதுக்கம், சவுக்­கடி, தளவாய், புண்­ணை­குடா ஆகிய இடங்­க­ளிலும் நாளை 20.11.2015ஆம் திகதி மண்டூர், கணே­ச­புரம், சங்­கர்­புரம், தம்­ப­ள­வத்தை, ராண­மடு ஆகிய இடங்க­ளிலும் 21.11.2015ஆம் திகதி பிர­தான வீதி, காந்தி வீதி, மத்­திய வீதி, புனித அந்­தோ­னியார் வீதி, நீதி­மன்ற வளாகம், மாந­கர சபை வளாகம், பிர­தேச செய­லக வளாகம், ஆஸ்­பத்­திரி வீதி மற்றும் வாழைச்­சேனை பொலிஸ் பகுதி, கரு­வாக்­கேணி, கிண்ணையடி, கிரான், கோர­கல்­லி­மடு, சந்­திவெளி பால­ய­டி­தோனை, பறங்­கி­யா­மடு, முறக்­கொட்­டாஞ்சேனை, சித்­தாண்டி, மற்றும் புலி­பாய்ந்­தகல் பகுதி முழு­வதும் ஆகிய இடங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.