ஜனா­தி­பதி – பிர­தமர் தீவிர மந்­தி­ரா­லோ­சனை!!!

Published By: Digital Desk 7

31 Mar, 2018 | 11:32 AM
image

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது­ தொ­டர்­பாக ஜனா­தி­பதிமைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  நேற்று முன்­தினம் இரவு  நீண்­ட­நேரம்  பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக  நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இதன்­போது   நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது எவ்­வாறு நடந்து கொள்­வது, மற்றும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் விரி­வாக  ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது. 

குறிப்­பாக  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது  தனக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென பிர­தமர்   ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யி­ருக்­கலாம் என  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

எவ்­வா­றெ­னினும் நீண்­ட­நேரம்  இடம்­பெற்ற  இந்­தக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது   எது­வித முடி­வு­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தனது கட்­சி­சார்­பான விட­யங்­களை இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ருக்கு தெளி­வு­ப­டுத்­தி­ய­தாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கி­டை­யி­லான இந்த சந்­திப்பு  தொடர்பில் நேற்று நடை­பெற்ற இரண்டு செய்­தி­யாளர் மாநா­டு­களில் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது.  கொழும்பில்  நடை­பெற்ற   சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட முக்­கி­யஸ்­தர்கள்    ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேற்று முன்­தினம் இரவு சந்­திக்­க­வில்லை என தெரி­வித்­தனர். 

இதே­போன்று நேற்­றைய தினம் சிறி­கொத்­தவில் நடை­பெற்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேற்று முன்­தினம் சந்­தித்­தா­கவும்  அதன்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவா­தத்தில்  பிர­த­மரைக் காப்­பாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி முன்­வந்­த­தா­கவும்  தெரி­வித்­தி­ருந்­தனர்.  

எவ்­வா­றெ­னினும்  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் நேற்று முன்­தினம் இரவு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யமை தொடர்பில் இது­வரை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான தக­வல்கள் எதுவும் வெளி­வ­ர­வில்லை. 

இதே­வேளை ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள்  வலு­வ­டைந்­து­கொண்டே செல்­கின்­றன.   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  நிய­மித்­தி­ருந்த பொரு­ள­தார  மறு­சீ­ர­மைப்பு குழுவை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   கலைத்ததுடன் பிரதமரின் கீழ் இருந்த மத்திய வங்கியையும்  நிதி அமைச்சின் கீழ் கொண்டுவந்தார். 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக   ஏற்கனவே ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. ஆனால்  நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதாக ஐக்கியதேசியக்கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19