இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி 2

Published By: Priyatharshan

31 Mar, 2018 | 11:21 AM
image

கேள்வி:- யுத்­தத்­தினை நிறை­வு­செய்­வ­தற்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு பெரு­ம­ளவில் இருந்­த­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ள நிலையில் விடு­தலை போராட்­டத்­தினை ஆரம்­பிப்­ப­தற்கு உத­விய இந்­திய அர­சாங்கம் அதனை நிறை­வு­செய்ய வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு வந்­த­மைக்கு காரணம் என்ன?

பதில்:- ஈழத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட பிரி­வினைப் போராட்­டத்­தினை இந்­தியா எப்­போ­துமே விடு­த­லைக்­கான போராட்­ட­மாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஈழத்­த­மி­ழர்கள் இத்­த­கைய கண்­ணோட்­டத்தில் இந்த விட­யங்­களை அணு­கு­வது மிகப்­பெரும் குறை­பா­டாகும். 

1987ஆம் ஆண்டு இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்தின் முத­லாவது விட­யமே இலங்கை ஒரு­மித்த நாடாக இருக்க வேண்டும் என்­பது தான். அத­ன­டிப்­ப­டையில் தனி ஈழ எண்­ணத்­தி­னை இந்­தியா எப்­போ­துமே ஆத­ரிக்­க­வில்லை. 

இந்த ஒப்­பந்­தத்­திற்கு முன்­ன­ரான காலத்தில் மலை­யக தமி­ழர்­களின் வாழ்­வு­ரிமை பறிக்­கப்­பட்­டி­ருந்­தது. வடக்கு தமி­ழர்­க­ளுக்கும் நெருக்­க­டிகள் இருந்­தன. இந்த தரு­ணத்தில் தமி­ழர்­க­ளுக்கு சம உரிமை வேண்டும் என்­பதே இந் ­தி­யாவின் நிலைப்­பா­டாகும். 

அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில் இலங்கை விட­யத்தில் இந்­தியா முழு­மை­யாக தலை­யிட்­டது. 1985 இல் இலங்கை அர­சாங்­கத்­தி­னையும், போராட்ட தரப்­பி­ன­ரையும் அழைத்து இந்­தி­யா வின் தலை­மையில் திம்­புவில் பேச்சு நடத்­தப்­பட்­டது. அதன் பின்னர் பெங்­க­ளூருவில் பேச்சு நடத்­தப்­பட்­டது. இவ்­வா­றான பேச்­சு­வார்த்­தை­களை சரித்­திர ரீதி­யாக பார்த்­தோ­மானால் பிர­பா­கரன் ஆரம்­பத்­தி­லி­ருந்து எதற்கும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருக்­க­வில்லை. 

பெங்­களூரு பேச்­சு­வார்த்­தையின் போது பிர­பா­கரன் தனது சார்பில் பிர­தி­நி­தி­யொ­ரு­வரை அமர்த்­தி­விட்டு அவர் எழுந்து சென்­று­விட்டார். பிர­பா­க­ர­னுக்கு என்­றுமே தனது தலை­மை­யி­லேயே தனி ஈழம் அமைய வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருந்தார். இதனால் தான் ஏனைய போராட்ட இயக்­கங்­களை அழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் தொடர்ந்து எடுத்து வந்தார். 

இதனால் தான் இந்­தியா இலங்கை விட­யத்தில் தலை­யீடு செய்­த­வுடன் விடு­த­லைப்­பு­லிகள் தவிர்ந்த ஏனைய அமைப்­புக்கள் இந்­தி­யா­வுக்கு ஒத்­து­ழைப்பு நல்­கி­யி­ருந்­தன. மேலும் தமி­ழக அர­சியல் கட்­சி­க­ளுடன் போராட்ட அமைப்­புக்­க­ளுக்கு நெருங்­கிய தொடர்­புகள் இருந்­தன. 

அக்­கட்­சிகள் தம்­முடன் நெருங்­கிய தரப்­பி­ன­ருக்கு உத­வி­களைச் செய்­தார்கள். குறிப்­பாக கம்யூ­னிஸ்ட் கட்­சி­யுடன் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், தி.மு.க.வு­டனும் காங்­கி­ர­ஸு­டனும் ரெலோவும், நெருக்­க­மாக இருந்­தார்கள். எம்.ஜி.ஆர்.தலை­மை­யி­லான அ.தி.மு.க. விடு­த­லைப்­பு­லி­களை ஆத­ரித்­தது. 

இத­னை­வி­டவும் இலங்­கை­யி­லி­ருந்து நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இந்­தி­யா­வுக்கு வரு­கை­தந்த மக்­க­ளுக்கும் போரா­ளி­க­ளுக்கும் இந்த நாட்டு மக்கள் பெரு­ம­ளவில் உத­வி­னார்கள். இவ்­வா­றான நிலைமை இருந்­த­போதும் விடு­த­லைப்­பு­லிகள் ஏனைய அமைப்­புக்­க­ளுடன் கொண்­டி­ருந்த முரண்­பாட்­டினை கைவி­ட­வில்லை. 

உதாரண­மாக கூறு­வ­தாயின் ரெலோ தலை வர் சிறி ச­பா­ரட்­ணத்தை கொலை­ செய்­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளதை தி.மு.க. தலைவர் மு.கரு­ணா­நிதி முன்­ன­தா­கவே அறிந்­தி­ருந்தார். அத்­துடன் கரு­ணா­நிதி மது­ரையில் உரை­யாற்­றும்­போது 24 மணி­நேரம் அவ­காசம் கொடுக்­கு­மாறு பகி­ரங்­க­மா­கவே கோரி­ய­போதும் அதற்­கான மரி­யாதை வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் மற்றும் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தே­சத்­துடன் அர­சியல் ரீதி­யாக தொடர்­பா­டக்­கூ­டிய தகைமை கொண்­டி­ருந்த அமிர்­த­லிங்கம் போன்­ற­வர்­களை கொலை செய்­தமை பிர­பா­கரன் செய்த மிகப்­பெரும் தவ­றாகும். 

இவ்­வாறு முக்­கிய தலை­வர்கள் மர­ணத்தின் பின்னர் தனி ஈழம் என்­பது எவ்­வாறு முன்­னேற்றம் அடையும். நோர்வே தலை­மையில் சமா­த­ானப் ­பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது அர­சியல் தலை­வர்­களின் தேவை உண­ரப்­பட்­டது. இருப்­பினும் விடு­த­லைப்­பு­லிகள் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதனால் தான் அந்தப் பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டைந்­தது. 

இந்­திய அமைதிப்­படை இலங்­கைக்கு சென்­ற­போது பங்­கா­ளாதேஷ் உரு­வா­ன­து­போன்று தனி ஈழமும் உரு­வாகி விடும் என பெரும்­பா­லான ஈழ­மக்கள் கரு­தி­னார்கள். இது ஈழத்­த­மி­ழர்­களின் பெரும்­கு­றை­பா­டாகும். பங்­க­ளாதேஷ் போரின்­போது நான் அதில் நேர­டி­யா­கவே பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். அந்­தப்­போரில் மக்கள் போரா­டி­னார்கள். இந்­தியா அனைத்து வகை­யிலும் அவர்­க­ளுக்கு உத­வி­யது. ஏனெனில் கிழக்கு பாகிஸ்தான் (தற்­போ­தைய பங்­க­ளாதேஷ்) வேறு தமிழீழம் வேறு. அதனால் இந்­தியா ஈழத்­த­மி­ழர்கள் விட­யத்தில் நிலைமை அவ்­வாறு இருக்­க­வில்லை. 

தற்­போதும் கூட தமக்­கான விட­யங்­களை இன்­னொ­ருவர் செய்வார் என்று எதிர்­பார்ப்­பது அந்த மக்­க­ளி­டத்தில் காணப்­ப­டு­கின்ற பெருங்­கு­றை­பா­டாகும். ஆக இந்­தியா ஆரம்­பத்­தி­லி­ருந்த அதே­நி­லைப்­பாட்டில் தான் இறுதி வரையில் இருந்­தது.

கேள்வி:- இந்­திய அமை­திப்­ப­டையில் புல­னாய்வு தலை­மையை வகித்­தி­ருந்­தவர் என்ற வகையில் இலங்­கை யில் பணி­யாற்­றிய அனு­ப­வத்­தினை பகிர்ந்து கொள்­ளு ங்கள்?

பதில்:- இலங்­கைக்கு எதற்­காக போகின்றோம் என்று தெரி­யாத நிலையில் தான் இந்­திய இரா­ணுவம் அங்கு சென்­றது. அவர்கள் சென்று

மூன்று நாட்­களின் பின்னர் புனேயில் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது எனக்கு இலங்கை செல்­லு­மாறு அறி­விப்பு கொடுக்­கப்­பட்­டது. அச்­ச­ம­யத்தில் ஜெனரல்  தீப்­பேந்தர் சிங்கை சந்­தித்தேன். அதன்­போது எத்­தனை நாட்கள் தங்­கி­யி­ருக்க வேண்டும் என்று கேட்டேன், ஏனெனில் என்­னி­டத்தில் மூன்று சீரு­டை­களே இருந்­தன. 

ஆகக்­கு­றைந்­தது ஒரு­வாரம் தங்­கி­யி­ருந் தால் போதும் என்று தான் தீப்­பேந்தர் சிங் என்­னி­டத்தில் கூறினார். இரு­நா­டு­க­ளுக்­கு­மி­டை யில் ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­கப்­போ­கின்­றது. இலங்கை இரா­ணு­வத்­தினை முகாம்­க­ளி­லேயே தங்­கு­மாறு சொல்­லப்­பட்­டுள்­ளது. ஆகவே அங்கு பாது­காப்பு வழங்க வேண்­டி­யுள்­ளது. ஆயுதக் குழுக்கள் அனைத்து ஆயு­தங்­க­ளையும் வழங்­கி­வி­டு­வார்கள் அவ்­வ­ள­வுதான் என்று கூறினார். 

உண்­மை­யி­லேயே அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தனது பாது­காப்­புக்­கா­கவே இந்­திய இரா­ணு­வத்­தினை இலங்­கைக்கு அழைத்தார் என்று நினைக்­கிறேன். அச்­ச­ம­யத்தில் இரண்டு இந்­திய கடற்­படை கப்­பல்­களும் அதற்­காக கொழும்பு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 

ஜே.ஆருக்கு பாது­காப்பு சம்­பந்­த­மான பயம் ஏற்­ப­டு­வ­தற்கு காரணம் இருந்­தது. பிர­பா­க­ரனை தாக்­குதல் நடத்­து­வதன் மூலம் பிடிக்க முடியும் என்று இலங்கை இரா­ணுவம் தயார் நிலையில் இருந்­த­போது தான் இந்­திய–இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அதனால் தான் ஜே.ஆர். இலங்கை இரா­ணு­வத்­தினால் ஆபத்­துக்கள் ஏதும் எழுந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக இந்­திய படை­யி­னரை வர­வ­ழைத்தார். 

அதே­நேரம் இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு முன்பு பிர­பா­கரன் ஒப்­புதல் அளித்தார். ஆனால் அவர் அதனை கடைப்­பி­டிக்­க­வில்லை. இடைக்­கால நிரு­வாக சபை உரு­வாக்­கப்­பட்­ட­போது தானேதான் செய­லாளர் பெயரை முன்­மொ­ழிவேன் என்றும் பிர­பா­கரன் உறு­தி­யாகச் சொன்னார். ஆனால் இலங்கை அர­சாங்­கத்­தினால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட மூவரின் பெயர்­களில் அவர் முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­வரின் பெயர் இருந்தும் அதை அவர் ஒப்புக்கொள்­ள­வில்லை.பிர­பா­க­ரனைப் பொறுத்­த­வ­ரையில் அவர் முற்­றிலும் வேறு­பட்ட மன­நி­லை­யி­லேயே இருந்தார். புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ போன்ற அமைப்­புக்கள் தம்மை விஞ்­சி­வி­டக்­கூ­டாது என்­பதில் உறு­தி­யாக இருந்தார். அத­னை­விட கிட்­டிய வாய்­ப்புக்­களை உப­யோ­கிக்கும் முடி­வு­களை எடுப்­பதில் கவனம் செலுத்­த­வில்லை. 

இதற்கு அடுத்து மிக முக்­கி­ய­மான சம்­பவம், கும­ரப்பா, புலேந்­திரன் உள்­ளிட்ட 12விடு­த­லைப்­பு­லிகள் இலங்கை அர­சாங்­கத்­தினால் பிடிக்­கப்­பட்­டனர். பலா­லிக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டனர். அந்த சம்­ப­வத்­தினை நேரில் பார்த்­த­வ­ராக நான் இருக்­கின்றேன். 

அப்­போ­தைய யாழ்.மாவட்ட தள­ப­தி­யா­க­வி­ருந்த ஜெனரல் ஜெய­ரட்ன ஜே.ஆரை தொடர்பு கொள்­ள­ மு­யன்­ற­போது சமிக்ஞை கிடைக்­க­வில்லை. பின்னர் அங்­கி­ருந்த தொலைத்­தொ­டர்பு கோபு­ரத்தில் ஏறி ஜே.ஆர். உடன் உரை­யா­டினார். பின்னர் என் அருகில் வந்­தவர், ஹரி, ஜே.ஆர்.விரும்­ப­வில்லை இவர்­களை முடிக்க வேண்­டி­யது தான் என்றார். 

புலேந்­திரன் போன்­ற­வர்­களின் செயற்­பா­டு­களை ஜே.ஆர்.நன்கு அறிந்­தி­ருந்­ததால் அவர்­களை விடு­விக்கும் மன­நி­லைக்கு அவர் வந்­தி­ருக்­க­மாட்டார் என்­பது எனது கணிப்­பா­க­வுள்­ளது. அதே­நேரம் பிர­த­ம­ரா­க­வி­ருந்த ரண­சிங்க பிரே­ம­தாஸ ஆரம்­பத்­தி­லி­ருந்து இந்­தியப் படை­யினர் இலங்கை வரு­வதை எதிர்த்து வந்தார். தேசியம் சார்ந்த மன­நி­லையில் அது சரி­யான விடயம். அதற்­காக பிற்­கா­லத்தில் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­புக்கு ஆயுதம் வழங்­கி­யமை முட்டாள்தன­மான விடயம். அந்த விட­யத்தில் அவரும் ஏறக்­கு­றைய பிர­பா­கரன் போன்று தான் செயற்­பட்டு இருக்­கின்றார்.  

கேள்வி:- இந்­திய அமைதிப்படைக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் திடீ­ரென ஏன் முரண்­பா­டான நிலை­மைகள் எழுந்து மோதல்கள் உரு­வா­கின?

பதில்:- என்­னு­டைய அனு­ப­வத்தில் விடு­த­லைப்­பு­லிகள் போன்று 24 ஆயுத இயக்­கங்­களை கண்­டி­ருக்­கின்றேன். பிர­பா­கரன் போன்று பல்­வேறு தலை­வர்­களை பார்த்­துள்ளேன். விடு­தலை என்ற தோர­ணையில் உள்ள அந்த தலை­வர்­களின் மன­நி­லை­யா­னது ஒரு கட்­டத்தில் தன்னால் எத­னையும் செய்ய முடியும் என்று நம்­பு­கின்­றார்கள்.ஆலோ­சனை சொல்­ப­வர்­களைக் கூட வெறு­க்கின்­றார்கள். 

குறிப்­பாக விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு தீர்­மா­னங்­களை ஆரம்­ப­க்கட்­டத்தில் கும­ரப்பா, பிர­பா­கரன், கிட்டு, யோகி, மாத்­தையா போன்­ற­வர்கள் ஒன்­றி­ணைந்தே எடுப்­பார்கள். தொட ரும் காலத்தில் பிர­பா­கரன் மட்­டுமே தீர்­மா­னங்­களை எடுத்தார். ஆலோ­சனை கூறி­ய­வர்­களை வெறுத்தார். போரில் வீரம் மட்­டுமே போதாது. விவே­கமும் தேவை என்­பதை உணர வேண்டும். 

இவ்­வா­றி­ருக்­கையில் இந்­திய– இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­னது. இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­ன­போது அனு­பவம் வாய்ந்த அமைச்­ச­ரா­க­வி­ருந்த நர­சிம்­மராவ், அதனை எதிர்த்தார். அவர்,வெளிநாட்டில் நடக்கும் ஒரு உள்­நாட்டு பிரச்­சி­னையில் அங்­குள்ள போராட்ட அமைப்­புக்கள் சார்ந்த செயல்­பாட்­டுக்கு  எவ்­வாறு இந்­தியா உத்­த­ர­வாதம் அளிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்­பினார். 

ஆனால் இந்­தியா அந்த உத்­த­ர­வா­தத்­தினை இலங்­கைக்கு வழங்­கி­யது. இறு­தியில் ஒப்­பந்­தத்தின் பிர­காரம் ஜே.ஆர். போராட்ட அமைப்­புக்­க­ளி­டத்தில் இருந்து ஆயு­தங்­களை களைந்து தாருங்கள் என்று கோரினார். ஆயு­தங்­களை வைக்­காத அமைப்­புக்­க­ளுடன் இந்­திய அமை­திப்­ப­டை­யினர் போராட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. 

கேள்வி:- இந்­திய அமை­திப்­ப­டைக்கு விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான மோதலில் பின்­ன­டைவைச் சந்­திப்­ப­தற்கு பிர­தா­ன­மான காரணம் என்ன?

பதில்:- இந்­திய அமை­திப்­ப­டை­யானது இலக்­குகள் இன்­றியே இலங்கைக்கு சென்­றி­ருந்தது. திலீ­பனும் உண்­ணா­விரதம் இருந்து மரண­ம­டைந்தார். அது­பெரும் தாக்­கத்­தினை கொடுத்­தது. கும­ரப்பா,புலேந்­திரன் உள்­ளிட்ட 12 பேரின் மரணம் நடை­பெற்­றது. இந்த நிலையில் பிர­பா­கரன் பழி­வாங்கும் மனப்­பாண்­மையில் இருந்தார்.அத­னை­ய­டுத்து விடு­தலைப் புலி­களால் போர் அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது.

முக்­கி­ய­மாக 12 பேரின் மரணம் ஒரு கரும்­புள்­ளி­யான விடயம். இந்­தியா நினைத்­தி­ருந்தால் அதனை தடுத்­தி­ருக்­கலாம். ஆனால் ஏன் செய்­ய­வில்லை என்­ப­தற்கு என்­னு­டைய மட்­டத்தில் பதில் இல்லை. இருந்­தாலும் அந்த 12 பேரின் உடல்­களை கைய­ளிக்­கும்­போது மாத்­தை­யா­வி­டமும் அவ­ருடன் வந்­தி­ருந்த வழக்­க­றி­ஞ­ரி­டத்­திலும் இந்­திய இரா­ணு­வத்­துடன் போரிடும் முடிவை எடுக்­கா­தீர்கள். அது பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­விடும் என்­பதை பிர­பா­க­ர­னிடம் கூறுங்கள் என்று தெரி­வித்­தி­ருந்தேன்.  

இருப்­பினும் போர் இடம்­பெற்­றது. முதற்­கட்­டத்தில் இந்­தியப் படை­யி­ன­ருக்கு பெரும் இழப்­புக்கள். சரி­யான திட்­ட­மி­டல்கள் இருக்­க­வில்லை. இருப்­பினும் பின்­னையை நாட்­களில் இந்­திய இரா­ணுவம் சாதா­ரண நிலை­மையை உரு­வாக்­கி­யது. வடக்கில் இந்­தி­யாவின் நேர­டிப்­பி­ர­தி­நி­தி­க­ளாக இந்­திய இரா­ணுவம் இருந்­த­மையால் ரயில்­போக்­கு­வ­ரத்து, தொலைத்­தொ­டர்பு, வங்­கிகள் உள்­ளிட்­ட­வற்றை மீள­மைத்­தது. 

தொடர்ந்து படை­ந­ட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இறு­தியில் வவு­னி­யாவை அண்­மித்து ஏ9 வீதிக்கு வல­து­பக்­க­மா­க­வுள்ள அலம்பில் காட்­டுப்­ப­கு­திக்குள் விடு­த­லைப்­பு­லி­களை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்­தி­ருந்தோம். அச்­ச­ம­யத்தில் கூட அவர்­களை கொலை செய்­யக்­கூ­டாது என்று டெல்லி எம க்கு அறிவுறுத்­தி­யிருக்­க­வில்லை. அச்­சந்­தர்ப்­பத்தில் தான் மீளவும் இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டோம். 

கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்த­ரான மாத்­ தை­யா­வுக்கும் இந்­தியப் புல­னாய்வு அமைப்­பான ரோ வுக்கும் இடையில் தொடர்­புகள் காணப்­பட்­ட­னவா?

பதில்:- அது தொடர்­பாக நான் எந்த விட­யங்­க­ளையும் அறிந்­தி­ருக்­க­வில்லை. ஆனால் விடு­தலைப் புலி­களின் அனைத்து மட்­டத்­தி­ன­ரு­டனும் ரோ வுக்கு தொடர்­புகள் காணப்­பட்­டன என்­பது எனக்கு தெரியும். பிர­பா­கரன் கூடவும் ரோ வுக்கு தொடர்­புகள் இருந்­தன. ஆனால் மாத்­தை­யா­வுடன் எத்­த­கைய உற­வுகள் இருந்­தன என்­பது எனக்குத் தெரி­யாது.

கேள்வி:- இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்தி படு­கொலைவிட­யத்­தினை நீங்கள் முன்­ன­தாக அறிந்­த­தாக கூறி­யி­ருக்­கின்­றீர்­களே?

பதில்:- ஆம், இலங்­கை­யி­லி­ருந்து திரும்­பி­யதும் எமது தலைமை அலு­வ­ல­கத்­தினை ஸ்ரீந­க­ருக்கு மாற்றும் பணியில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்தோம். அனைத்து கட்­ட­மைப்­புக்­க­ளையும் சென்­னை­யி­லி­ருந்து அனுப்­பிய நிலையில் இறு­தி­யாக ரேடியோ இன்டர் செப்ட் கட்­ட­மைப்பு மாத்­திரம் மாற்­று­வ­தற்கு தயா­ராக இருந்­த­போது நீல­கிரி அரு­கா­மையில் இருந்து விடு­தலைப் புலி­களின் ஒலிப்­ப­திவு கிடைக்­கப்­பெற்­ற­தாக கூறினர். அதில் அவர்கள் ராஜீவ் காந்­தியை மண்­டையில் போடுங்கள் என்று அறி­வித்­தி­ருக்­கின்­றார்கள் என்றனர். 

பொது­வாக இந்த கட்­ட­மைப்பில் இலங்கைத் தமிழ், சிங்­களம் தெரிந்த உத்­தி­யோ­கத்­தர்கள் பணி­யாற்­று­வார்கள். இதனால் என்­னி­டத்தில் அவர்கள் அதனை குறிப்­பிட்­டி­ருந்தனர். அச்­ச­ம­யத்தில் நான் விடு­த­லைப்­பு­லிகள் மர­ண­

தண்­டனை அறி­விப்­பினைத் தான் இலங்கை தமிழ் வழக்கில் கூறி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை எனது மூத்த அதி­கா­ரி­யாக இருந்த ஜென­ர­லி­டத்தில் குறிப்­பிட்டேன். 

அச்­ச­ம­யத்தில் அவர் எமது கட்­ட­மைப்­புக் கள் மாற்­றப்­பட்­டுள்­ள­மையால் எமக்கு அதில் அதி­காரம் கிடை­யாது. அந்த தக­வலை இந்­திய உள­வுத்­துறை பணி­ய­கத்­திற்கு அனுப்­பு­மாறு கோரினார். நான் அப்­பி­ரிவில் சென்­னையில் தலை­வ­ரா­கயி­ருந்த தமிழர் ஒரு­வ­ரிடம் தக­வலை வழங்­கினேன். அதன்­போதும் மண்­டை­யி­ல்­போ­டுங்கள் என்ற வார்த்­தையை அவர் பெரி­தாக கரு­த­வில்லை. இருந்­த­போதும் நான் நூற்­றுக்கும் அதி­க­மான கொலைச் சம்­ப­வங்­களில் இந்த வார்த்தை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டினேன்.

அதன் பின்னர் அந்த தகவல் எவ்­வாறு பரி­மா­றப்­பட்­டது என்­பதை நான் அறி­ய­வில்லை. இதே ஒலி­ப­ரி­மாற்ற பதிவு இந்­திய கடற்­ப­டை­யி­ன­ரி­டத்­தி­லி­ருந்தும் கிடைக்­கப்­பெற்­ற­தாக ராஜீவ் கொலை புல­னாய்வுக் குழுவின் இயக்­கு­ந­ராகவிருந்த டி.ஆர்.கார்த்­தி­கே­யனும் குறிப்­பிட்­டுள்ளார். இந்த விடயம் ராஜீவ் காந்­தியின் படு­கொலை இடம்­பெ­று­வ­தற்கு சுமார் ஆறு ஏழு மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்­றது. 

கேள்வி:- இந்­திய அமை­திப்­ப­டை­யினர் மற்றும் இலங்கை இரா­ணு­வத்­தினர் யுத்­த­கா­லத்தில் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­களை இழைத்­த­தாக கூறப்­ப­டு­கின்­றமை தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?

பதில்:- மனி­த­னுக்கு காணப்­படும் அடிப்­படை உரி­மையே உயிர்­வாழும் உரி­மை­யாகும். போர் என்­பதே மனி­த­னுக்­குள்ள அடிப்­படை உரி­மையை எடுப்­ப­தாகும். இவ்­வா­றான விட­யங்­களை எவ்­வாறு கையாள்­வது என்­பது குறித்து இந்­தியா கற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக மனித உரிமைகள் ஆணை­ய­கத்தின் ஊடாக முறைப்­பாட்­டினை செய்­தார்­க­ளாயின் அதனை விசா­ரித்து இரா­ணு­வத்­திடம் கைய­ளித்து பின்னர் நட­வ­டிக்கை எடுக்க முடியும். 

உதா­ர­ண­மாக காஷ்­மீரில் 2375 முறைப்­பா­டுகள் இரா­ணு­வத்­துக்கு எதி­ராக பதி­வா­கியுள்­ளன. அவற்றை விசா­ரணை செய்து 135 இரா­ணு­வத்­தினர் மீது நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளோம். குறிப்­பாக இந்த விட­யத்தில் இரா­ணுவ நீதி­மன்­றத்­தினை பகி­ரங்­க அமர்வு செய்து தீர்ப்­புக்கள் வழங்­கப்­பட்­டமை முக்­கிய விட­ய­மாகும். இந்த வி­டயத்தில் குறை­பா­டுகள் இருக்­கின்­றன. ஆனால் முன்­னேற்றம் அடைந்­துள்ளோம்.

இந்­திய அமை­திப்­ப­டை­யினர் அங்கு இருந்­த­போது சில­ த­வ­றுகள் நிகழ்ந்­தன. அக்­கா­ல­கட்­டத்தில் மனித உரி­மைகள் தொடர்பில் உயர்ந்த சிந்­தனை இருக்­க­வில்லை. மேலும் அக்­கா­லத்தில் சட்டம் ஒழுங்கு இலங்கை பொலிஸ் தரப்­பிடம் இருந்­தது. கிரா­மங்­களில் கிராம சேவ­கர்கள் இருந்­தார்கள். அவர்கள் அந்த விட­யத்­தினை கையாண்­டி­ருக்க வேண்டும். சாட்­சி­யங்­களை  திரட்டி முறைப்­பா­டுகள் செய்யப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அதி­காரம் இருந்தும் அவர்கள் அவற்றை வேடிக்கை பார்த்­த­வர்­க­ளாக இருந்­தனர். அது­கு­றித்து விசா­ரணை குழு தேவை என்று இலங்கை அரசு நிச்­ச­யித்தால் நிய­மிக்­கலாம் என நானும் பல­த­ட­வைகள் பரிந்­து­ரைத்­துள்ளேன்.

அதே­நேரம் இலங்கை இராணுவம் ஈழப்­போரை மனிதா­பி­மான போராக நடத்­தி­ய­தாக கூறு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இந்த விட­யங்­களை ஆராய்ந்து விசா­ரணைக் குழுவை நிய­மித்து நடவ­டிக்­கைகள் போர் முடிந்­த­வுடன் எடுக்­கப்­பட்­டிருந்தால் நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருக்க வாய்ப்­பி­ருந்­தி­ருக்காது. அதனை அவர்கள் செய்­ய­வில்லை. இந்த விடயத்தினை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடத்தில் நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தபோது அவர் கோபமடைந்தார். 

இது இலங்கையில் எப்போதுமே நிகழும் குறைபாடு. குறிப்பாக மனித உரிமைகள் மீறல் ஆய்வு நடத்த இந்தியாவிலிருந்து நீதியரசர் பகவதி இலங்கை அரசின் அழைப்பில் வந்த போது அவருக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே மனித உரிமை கள் விடயத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

மேலும் மனித உரிமைகள் விடயத்தில் தெற்காசிய நாடுகளில் பாரிய குறைபாடு உள்ளது. மக்கள் மட்டத்திலிருந்து அதனை கட்டியெழுப்ப வேண்டியது அரசியல் தலைவர்களின் பணியாகின்றது.  அவ்வாறு செயற் படாது விட்டுவிட்டு இங்கு பின்லாந்து, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள மனித உரிமை சூழலை எதிர்பார்க்க முடியாது. 

தற்போது கூட இலங்கையில் இடம்பெற்ற தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுகின்றார்கள். இந்த விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நாடுவதென்றால் முதலில் அடிப்படை ஆதாரங்களை சேகரித்து அதனை முறையாக சமர்ப்பிக்கவேண்டும். எடுத்த எடுப்பில் சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட முடியாது. பிரசாரம் செய்வதனை விடுத்து சாட்சியங்களை சேகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாது விவேகமாக செயற்பட வேண்டும். 

கேள்வி:- சமகால இலங்கை அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு அந்நாட்டு தேசிய பிரச்சினைக்கு எவ்வாறாக தீர்வு காணமுடியும்?

பதில்:- தமிழகத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பில் பல கட்சிகளும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அந்த மக்களுக்காக இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து உதவிகளை வழங்கியிருக்க முடி யும். அதனை செய்யவில்லை. ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறு இருக்கின்றார்கள். 

தமிழ் நாட்டில் மாத்திரம் 12 சதவீத தொழில் வளர்ச்சி காணப்படுகின்றது. தேசிய உற்பத்தி யும் அதிகரித்துள்ளது. ஆகவே இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தொழிலதிபர்களை ஒன்றிணைத்து இலங்கை தமிழர் கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்தினை மீள கட்டியெழுப்ப எவ்வாறு உதவ முடியும் என்று திட்டமிட்டிருக்க முடியும். அதனை செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் 12 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக் கமாட்டார்கள். 

கல்வி விடயத்தில் தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகள் உள்ளன. வடக்கில் உயர்கல்வியை தொடரமுடியாதிருப்பவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் கல்வி கற்பதற்குரிய வாய்ப்புக் களை உருவாக்கியிருக்கலாம். பொறியியல் துறையில் இங்குள்ள கல்லூரிகளில் கற்பதற்கான வெற்றிடங்கள் உள்ளன. ஆகவே இவற் றை கவனமெடுத்து செய்திருக்கமுடியும். இந்த மனநிலை மாறவேண்டும். 

இலங்கையில் உள்ள தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து தமது மக்களுக்காக ஒரு அரசியல் திட்டவரைபொன்றை ஏன் மேற் கொள்ளக்கூடாது? இது தமிழர்களிடத்தில் காணப்படும் பெருங்குறைபாடாகும். தமது முகத்தினை கண்ணாடியில் பார்ப்பதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, தேசியப் பிரச்சினை தீர அரசியல் சாசன திடட்மொன்றை வரைவு செய்திருந்தார். அதுமிகவும் அருமையான தீர்வுத்திட்டமாகும். அது நடைமுறைப்படுத்தப் படாது போனமை துரதிர்ஷ்டவசமான விடயமாகும். ஆட்சிமாற்றம் இடம்பெற்ற பின்னர் கூட தயாராகவுள்ள அந்த வரைபை முழுமையாக அமுலாக்கம் செய்வதற்கு குரல் கொடுக்குமாறு தமிழ்த் தலைவர்களிடத்தில் கோருகின்றேன். 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை விடவும், இடைக்கால அறிக்கை வெளியிட்டு குழப்பங்கள் நிகழ்வதைவிடவும் தயார் நிலையில் உள்ள அந்த வரைபில் சிறுமாற்றங்களை செய்து நடைமுறைப்படுத்தலாம் அவ்வாறில் லையேல் இந்த விடயம் இழுபறியானதாகவே இருக்கும்.

இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி - 1

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சித்தாந்த போர்

2024-04-20 11:28:47
news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16