பாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­திய இலங்கை அணி வெற்றி இலக்கை இல­கு­வாக எட்டி இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியின் வெற்­றியை ருசித்­தது.

இவ் வெற்­றியின் மூலம் இரு போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடர் 1–1 என்ற அடிப்­ப­டையில் சம­நி­லையில் முடிந்­துள்­ளது.

இலங்கை அணியின் வெற்­றிக்கு வித்­திட்ட சசி­கலா சிறி­வர்­தன அபா­ர­மாக பந்­து­வீசி 4 விக்­கெட்­டுக்­களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை திக்­கு­முக்­காட வைத்தார்.

 இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்­கெட் ­அ­ணி­யு­ட­னான ஒருநாள் தொடரை முழு­மை­யாக தோற்ற இலங்கை மகளிர் அணி, இரு­ப­துக்கு 20 தொடரை வெற்­றி­கொள்ளும் முனைப்­புடன் கள­மி­றங்­கி­யது.

ஆனாலும் தொடர் தோல்­வி­களால் துவண்டு போயி­ருந்த இலங்கை மகளிர் அணி இரு­ப­துக்கு 20 தொடரின் முதல் போட்­டி­யிலும் தோல்வி கண்­டது. 

இந்­நி­லையில் நேற்று இரண்­டா­வது இரு­ப­துக்கு 20 போட்டி நடை­பெற்­றது.

இப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது.

அதன்­படி கள­மி­றங்­கிய பாகிஸ்தான், 16 ஓட்­டங்­களில் முதல் விக்­கெட்டை இழந்­தது. தொடர்ந்து இலங்கை அணி வீராங்­க­னைகள் சிறப்­பாக பந்­து­வீசி அசத்த பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்­களில் 72 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

இதில் சசி­கலா சிறி­வர்­தன 4 விக்­கெட்­டுக்­க­ளையும், குமாரி 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்தக் கள­மி­றங்­கிய இலங்கை அணி 14.2 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 73 ஓட்­டங்­களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இதில் சஞ்சீவனி 20, ஜெயாங் கனி 13, இமல்கா 11, ரெபேகா 19, சசிகலா சிறிவர்தன 6 ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.