"பாராளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ.தே.க தோற்கடித்தால் தற்போதைய நிலைமையை விட மோசமான வகையில் அதிகாரங்களை தக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற போதே டிலான் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டிலான்

சர்வாதிகார ஜனாதிபதியை நீக்குவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதியுச்ச சர்வாதிகார போக்கினை கொண்ட பிரதமரை உருவாக்கியுள்ளனர்.

நல்லாட்சியில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களில் ஜனாதிபதிக்கு  எதிராக சில ஏற்பாடுகளை செய்வதன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடிந்தாலும் கூட பிரதமருக்கு பைத்தியம் பிடித்தால் கூட அவரை பதவியிலிருந்து நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கேலியாக பதிலளித்தார்.