கண்டி - கலஹா, தெல்தொட குரூப்  11ஆம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடிரென பரவிய தீயினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இத் தீ விபத்தில் 2 லயன் குடியிருப்பு வீடுகள் முழுமையாகவும், பகுதியளவில் 2 லயன் குடியிருப்பு வீ டுகளும் சேதமடைந்துள்ளன.

குறித்த 4 வீடுகளிலும் உள்ள அனைத்துப் பொருட்களும், பாடசாலை மாணவர்களின் பாடசாலை உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இது வரை வெளி வராத நிலையில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.