“தேசிய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக  வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பு கூற வேண்டும்” என பேராசிரியர் குணதாச அமரசேகர நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அமரசேகர தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த கால அரசாங்கத்தினை விட தேசிய அரசாங்கத்தில் கடந்த மூன்று வருடங்களில் அதிகமான கடன்கள் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சி காலத்தில் 30 வருட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் குறுகிய காலக்கட்டத்தினுள் நாடு பாரிய அபிவிருத்தினையும் அடைந்தது.

இலங்கையின் உள்ளூர் மற்றும் சர்வதேச விடயங்களில் மேற்குலக வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் மித மிஞ்சியதாக காணப்படுகிறது. உலக வல்லரசு நாடுகளின் பிடியிலிருக்கும் வரை இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையாது.

இலங்கை முழுமையாக மேற்குலகத்தவர்களின் நிர்வாகத்தில் செயற்படுவது எதிர்காலத்தில் செயற்படுவது எதிர்காலத்தில் அபாயங்களை தோற்றுவிக்கும்” என தெரிவித்தார்.