பால்மா  - சமையல் எரிவாயு விலை அதிகரிக்குமா.? இதோ இறுதியான முடிவு.!

Published By: Robert

29 Mar, 2018 | 04:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சித்திரை புத்தாண்டு தின காலப்பகுதிகயில் பால்மா மற்றும் சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பதற்கான உள்ளூர் மட்டத்திலான தேவைகள் ஏதும் தற்போது இல்லை. இருப்பினும்  சமையல் எரிவாயு நிறுவனங்களின்  கோரிக்கைகளுக்கு அமைய எரிவாயுக்களின் விலையினை 275ரூபாவால் அதிகரிக்க பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருவதாக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அரச அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்.

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இலங்கை சதோச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மானிய முறையில் குறைத்துள்ளது. மக்களின் வாழ்வாதார தேவைகளின் நிமித்தம் தற்போது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. நாடுதழுவிய ரீதியாக உள்ள சதோச விற்பனை நிலையங்களில் பொருட் கொள்வனவுகளுக்கு விசேட கழிவுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய அரசி மற்றும் கிழங்கு ,பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் 2017ஆம் ஆண்டு ழூன்றாம் காலாண்டினை விட குறைவான விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்க தேசிய நுகர்வோர் அதகார சபை தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் தேங்காய் உற்பத்திகளின் விலைகள் உயர்வடைந்த நிலையில் காணப்பட்டது. தேய்காய்களின் அளவுகளை மையப்படுத்தி விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பது  குறித்து நிதியமைச்சு மற்றும் வணிக கைத்தொழில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.ச ர்வதேச மட்டங்களில் ஏற்பட்ட விலை தளம்பல்களுக்கு அமையவே விலையினை அதிகரிக்க குறித்த நிறுவனங்கள் கோரிக்கைகளை விடுத்தது. ஆனால் புத்தாண்டு காலப்பகுதியில் விலையினை அதிகரிக்க முடியாது என தேசிய நுகர்வோர் அதிகார சபை அறிவித்தது. பால்மாவின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. இருப்பினும் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் இதுவரை எவ்வித தீரமானங்களும் அரசமட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19