ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நோக்கில் ஊடக விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதியால் நடாத்தப்படவுள்ளது.

நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்குவகிக்கும் ஊடகத்துறையினை மேலும் வலுப்படுத்தி, ஊடக கலாச்சாரத்தினை வளர்ப்பதற்கான ஊக்குவித்தலை வழங்குதலே இவ்வைபவம் முன்னெடுக்கப்படுவதற்கான முக்கிய நோக்கமாகும். 

ஊடகவியலாளர்களினது திறன்களையும் பங்களிப்புக்களையும் மதிப்பிட்டு தொழில் ரீதியாக ஊடகவியலாளர்களால் ஆற்றப்படும் சேவைகளுக்கு மதிப்பளித்து விருது வழங்கல் இடம்பெறவுள்ளது. 

மேலும், இவ் விருது வழங்கல் இவ்வாண்டிலிருந்து தொடர்ச்சியாக வருடந்தோறும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.