புனித வியாழன் தின­மா­கிய இன்­றைய நாள் இயே­சுவின் வாழ்­விலும் அவ­ரு­டைய சீடர்­க­ளா­கிய கிறிஸ்­த­வர்­களின் வாழ்­விலும் முக்­கி­ய­மான நாள். இன்­றுதான் உலகம் உள்­ள­ளவும் தமது ஒப்­பற்ற உட­னி­ருப்பை உணர்த்தும் நற்­க­ருணை என்னும் அரு­ள­டை­யா­ளத்தை இயேசு நிறு­வினார். அந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்­தையாம் இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணி வாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில்தான். தாழ்ச்­சியின் மாட்­சியை இந்தத் தர­ணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்­தூ­தர்­களின் கால­டி­களை கழுவி, அன்புக் கட்­ட­ளையைக் கொடுத்­ததும் இந்த நாளே. இயே­சு­வி­னு­டைய இந்தச் சீரிய செயற்­பா­டு­களின் ஆழ­மான அர்த்­தத்தை புரிந்­து­ கொள்ள முயல்வோம். 

உயி­ருள்ள நீங்­காத நினைவுச்சின்னம்

இயே­சுவும் தமது வாழ்வின் இறுதிக் கட்­டத்தில் தாம் தந்­தை­யிடம் செல்­ல ­வேண்­டிய நேரம் வந்­த­ பொ­ழுது ஒரு நீங்­காத நினை வுச் சின்­னத்தை, தனது உயி­ருள்ள பிர­சன்­னத்தை விட்­டுச்­செல்ல விரும்­பினார். அதுதான் நற்­க­ருணை. பூச்­சி­யத்­திற்­குள்ளே ஒரு இராச்­சி­யத்தை ஆண்­டு ­கொண்டு புரி­யாமலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்­து­ கொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடு­கிறான் ஒரு கவிஞன். ஆம் உல­கமே கொள்­ள­ மு­டி­யாத இறைவன், ஒரு சிறு அப்­பத்­திற்குள் தன்னை சுருக்­கிக்­கொள்­கிறார், தன்னை குறுக்­கிக்­கொள்­கிறார். இது எப்­ப­டிப்­பட்ட விந்­தை­யான விடயம்.

இதை என் நினை­வாகச் செய்­யுங்கள் 

இஸ்­ராயேல் மக்கள் பாஸ்கா விழாவை ஆண்­டாண்டு கால­மாகக் கொண்­டா­டினர். இறை­வ­னு­டைய அற்­பு­த­மான வழி­ந­டத்­தலை உணர்­வு­பூர்­வ­மாக நினை­வு­கூர்ந்­தனர். அதே பாஸ்கா விழாவில் இயேசு புதிய ஒரு பாஸ்­காவைக் கொண்­டா­டு­கின்றார். இது என்­னு­டைய உடல் இது என்­னு­டைய இரத்தம். இதை என் நினை­வாகச் செய்­யுங்கள் என்று தன்­னு­டைய உட­லையும் இரத்­தத்­தையும் கோதுமை அப்­பத்தின் வடிவில், திராட்சை இர­சத்தின் வடிவில் அடை­யாள முறையில் இயேசு கொடுக்­கின்றார். ஆனால் அடுத்த நாள் பெரிய வெள்­ளிக்­கி­ழமை அது நிஜ­மாக மாறு­கின்­றது. பெரிய வியா­ழக்­கி­ழமை அடை­யாள முறையில் தன் உட­லையும் இரத்­தத்­தையும் கொடுத்த இயேசு, அடுத்த நாள் பெரிய வெள்­ளிக்­கி­ழமை மெய்­யா­கவே சிலு­வையில் தன் உடலை உடைத்தார், தன் இரத்­தத்தைச் சிந்­தினார். 

குருத்­து­வத்தை ஏற்­ப­டுத்­திய நாள்

இந்த நற்­க­ரு­ணையைப் பொரு­ளு­ணர்ந்து கொண்­டா­டவும், தந்தை இறை­வ­னுக்கும் இத்­த­ர­ணி வாழ் மக்­க­ளுக்கும் உற­வுப்­பா­ல­மாக விளங்­கவும் குருத்­துவம் என்னும் அரிய அருள் அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யதும் இந்த நாளில் தான். இதை என் நினை­வாகச் செய்­யுங்கள் என்று சொல்லி இறை­ ப­ணி­யா­ளர்­களை  குருக்­களை இயேசு ஏற்­ப­டுத்­து­கின் றார். இறைய­ரசின் பணி­யா­ளர்­க­ளா­கிய திருத்­தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் நற்­செய்தி பணி­யாற்றும் அனைத்து கிறிஸ்­தவப் பணி­யா­ளர்­க­ளுக்­காகவும் சிறப்­பாக இறை­வேண்டல் செய்­கின்ற நாளாக இந்நாள் அமை­கின்­றது. தமது வார்த்­தை­யாலும், வாழ்­வாலும் கிறிஸ்­து­வுக்கு சாட்­சி­ ப­கர இவர்­க­ளுக்கு இன்னும் இன்னும் இறை­யருள் கிடைக்க வேண்­டு­மென செபிக்க நாம் அழைக்­கப்­ப­டு­கின்றோம். 

படைத்­தவன் காண்­பித்த பணிவு 

தாழ்ச்­சியின் மாட்­சியை இந்த உல­கிற்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்­தூ­தர்­களின் கால­டி­களைக் கழுவி, பிற­ரன்­புக்குப் பெருமை சேர்த்­ததும் இந்த நாளே. பணி­விடை பெற­வல்ல, பணி­விடை புரி­யவே வந்தேன் எனக் கூறிய இயேசு, இன்று தம் சீடர்­களின் பாதங்­களைக் கழு­வு­வதன் மூலம் பணி­விடை புரிந்து முன்­மா­திரி காட்­டு­கின்றார். நான் செய்­த­து­போல நீங்­களும் செய்­யுங்கள் என இன்று எமக்கு அன்­புக்­கட்­டளை கொடுக்­கின்றார். 

யோவான் நற்­செய்­தியில் இயேசு நற்­க­ரு­ணையை ஏற்­ப­டுத்­திய நிகழ்ச்சி சொல்­லப்­ப­ட­வில்லை. மாறாக இயேசு தன் சீடர்­களின் பாதங்­களைக் கழுவும் நிகழ்ச்­சியே விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தம் மேலு­டையைக் கழற்றி வைத்­து­விட்டு (யோ 13: 14) என்ற வார்த்­தைகள் இயேசு தம்மை சுய வெறு­மை­யாக்­க­லுக்கு உட்­ப­டுத்­து­கின்றார் என்­பதை குறிக்­கின்­றது. இது அரச, இறை மகி­மையை கழைந்­து ­வி­டு­வதன் அடை­யாளம். ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்­டிக்­கொண்டார் என்ற வார்த்­தைகள் அடி­மை­களின் நிலையை எடுத்­துக்­கொண்டார் என்­பதைக் குறிக்­கின்­றது. 

நமக்குத் தரப்­பட்ட வாழ்க்கைப் பாடம்

தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்படுவதை இயேசு காண்கிறார். தாழ்ச்சி பற்றி இயேசு சொல்லிப் பார்த்தார். அவருடைய சீடர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே செயல் மூலம் விளக்கம் கொடுக்கின்றார். 

பாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை.  அதிகார மும், அகங்காரமும், நான் என்ற தன்மு னைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சியின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்கு வாழ்க்கைப்பாடமாக, செய்முறைப் பயிற்சியாகச் செய்து காட்டுகின்றார்.

எனவே இன்றைய புனித நாள் நமக்குத் தரும் நலமான, நயமான சிந்தனைகளை உள்வாங்கி அர்த்தமுள்ள வகையில் நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோமாக.