பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி - நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'தோழா' வின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 

எதிரிவரும் மாதம் வெளிவர உள்ள இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். 

இணை பிரியாத நடிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'தோழா' உலகெங்கும் உள்ள அருமையான கண்கவர் இயற்கை கொஞ்சும் தளங்களில் படமாக்கப்பட்டு உள்ளது.

பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடித்து உள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் கோபி சுந்தர் ஆவார்.பி எஸ் வினோத் ஒளிப்பதிவில், வம்ஷி இயக்கும் 'தோழா' மார்ச் மாதம் இறுதியில் வெளிவர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்