மனைவியைக் காணவில்லையென கணவன் வவுனியா பொலிசில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு நேற்று செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நான்காம் கட்டை கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஆரோக்கியஜோதி லெம்பேட் திவியா என்ற தனது மனைவி கடந்த திங்கட்கிழமை காலை தான் வேலைக்கு செல்லும் போது வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு சென்ற போது மனைவியைக் காணவில்லை எனவும், தனது மனைவியின் தொலைபேசியும் இயங்கவில்லை எனவும்  கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.