உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தெரிவான உறுப்பினர்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வு நேற்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்  அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கார்த்திக் சசிதரன், கல்குடா அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், மாகாண சபையின் முன்ளாள் உறுப்பினர் அலோசியஸ் மாசிலாமணி, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரன்  மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.