கம்பளை அம்புகமுவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து  சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை, சாலியாவத்தையைச் சேர்ந்த  42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விவாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.