மாளி­கா­வத்தை - அல்­லாமா இக் பால் மாவத்­தையில் இளைஞர் ஒருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்ளார்.  25 வயது மதிக்­கத்த இளைஞர் ஒரு­வரே இவ்வாறு சுட்­டுக்­கொல்­லப்பட்­டுள்­ள­தா­கவும் அடை­யாளம் தெரி­யாதோர் முன்­னெ­டுத்­துள்ள இந்த துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் மாளி­கா­வத்தை பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப் 

புப் பிரிவும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, மா­ளி­கா­வத்தை அல்­லாமா இக்பால் மாவத்­தையில்  நேற்று இரவு 8.30 மணி­ய­ளவில் இந்த துப்பாக்கிப் பிர­யோகம் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளது. துப்­பாக்கிச் சூட்­டுக்கு உள்­ளான இளைஞர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள நிலையில் அவர் பய­ணித்­த­தாக நம்­பப்­படும் முச்­சக்­கர வண்­டி­யொன்றும் அவ்­வி­டத்தில் கைவி­டப்பட்­டுள்ள நிலையில் காணப்­ப­ட்டதாகவும் அதில் அவர் பய­ணித்­தாரா இல்­லையா என்­பது குறித்து விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். சடலம் காணப்­படும் இடத்தில் 9 மில்­லி­மீற்றர் ரக துப்­பாக்கி ரவைகள் காணப்­படும் நிலையில் 9 மில்லி மீற்றர் ரக துப்­பாக்­கியால் சூடு நடத்­தப்பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.  உயி­ரி­ழந்த நபர் தொடர்பில் தக­வல்கள் உட­ன­டி­யாக தெரி­ய­வ­ராத போதும் அவர் நிப்பு எனும் பெயரில் அறி­ய­ப்ப­டு­பவர் என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வருகிறது.

 சம்­பவம் தொடர்பில் நீதிவான் விசா­ர­ணைகள் இடம்­பெறும் வரை சடலம் அவ்­வி­டத்­தி­லேயே வைக்­கப்பட்­டி­ருந்த நிலையில் கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிச் அத்தியட்சர் சாலிய சில்வா, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸா ஆகியோரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.