நினைவுத்திறன் மேம்பட என்ன செய்வது?

Published By: Robert

15 Feb, 2016 | 11:55 AM
image

கடந்த தேர்வு வரை அனைத்து பாடங் களிலும் முதன்மையான மாணவனாக வந்தான், ஆனால் தற்போது ஞாபக மறதியால் அவதியுறுகிறான்? என்று சில பெற்றோர்கள் புலம்புவதை கேட்டிருக்கலாம். அலுவலகத்தில் பணிபுரியும் சிலரோ தங்களின் நினைவுத்திறன் குறைந்து வரு வதை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து மீள்வது எப்படி? என தெரி யாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவும் நோக்கிலும், அனைவரும் தங்களின் செயல்பாட்டில் அதிக கவனத்துடன் இயங்கி வெற்றியைப் பெறவும், மூளையின் செயல்பாடு முக்கியமாகிறது. மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான ஓக்ஸிஜன் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக் காததால் தான் இத்தகைய பாதிப்பு ஏற் படுகிறது.

கரட், தக்காளி, கொட்டையுள்ள திராட்சை, ஓரஞ்சு,செர்ரி போன்ற பழங்களில் மூளைக்கு தேவையான விற்றமின் சத்துகள், மினரல்கள், பைட்டோ அமிலங்கள் ஆகியவை இருக்கின்றன. ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து கரட் சாப்பிட்டவர்களையும், சாப்பிடாதவர்களையும் பரிசோதித்து பார்த்தனர். இதில் தொடர்ச்சியாக கரட் சாப்பிட்டவர்களின் நினைவுத்திறன் மேம் பட்டதாகவும், சிறந்ததாகவும் இருந்ததை கண்டறிந்தனர். அத்துடன் இத்தகைய உண வின் மூலம், மூளையில் செரோட்டனின், அசிட்டின், கோலைன் என்ற இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகி, உடலின் இயக்கத்தில் கலந்ததை கண்டறிந்து இது தான் காரணம் என்று கூறினர்.

மூளையில் ஞாபக சக்தியை சிறப்பாக வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீன் மற்றும் மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்=3 என்ற கொழுப்பு அமிலம் தினமும் தேவை. இதன் மூலம் நல்ல முடிவை திடிரென்று எடுக்க இவை பெரிதும் துணைபுரிகின்றது. அதே சமயத்தில் நல்ல முடிவை எடுக்க ஒரு சிலருக்கு ஏதேனும் இனிப்பும் போதுமானதாக இருக்கிறது. அசைவத்தை விரும்பாத மற்றும் சைவ உணவுபிரியர்கள், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மனித உடலில் மூளை தான் அதிகளவு ஓக்ஸிஜனை பயன்படுத்துகிறது. எனவே மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல்கள் செறிந்த உணவு தேவை. அதே சமயத்தில் பலவீனமான மூளை, குழப்பம், நோய் தாக்குதல், அல் சைமர்ஸ் போன்றவை தாக்கப்படாமல் இருக்கவேண்டும் எனில் விற்றமின் பி ஏ மற்றும் ஈ போன்ற சத்துகள் உள்ள உணவு களும் தேவை.

மிகவும் நுட்பமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் எனில் ஏதேனும் ஒரு பழம் அல்லது இனிப்பை சாப்பிடவேண்டும். அரிசி, கோதுமை, உருளைக் கிழங்கு போன்ற உணவுகள், கோபம், பதற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் வல்லமை கொண் டவை. பெர்சி, செர்ரி பழங்கள், அப்ரிகாட், அவரைக்காய் ஆகியவை மூளையைச் சரி யாக பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பான்மையையும் காரியத்தை முடிக்கும் விடாமுயற்சியையும் அளிப்பதில் வல்லமைக் கொண்டது.

மனதை அமைதிப் படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதில் வெள்ளைப்பூண்டுக்கு பங்குண்டு. இவை மூளையில் உள்ள செல்கள் வேகமாக அழி யாமல் பாதுகாப்பதில் தனித்திறன் பெற்றவை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே வெள்ளைப் பூண்டை தவிர்க்காமல் உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

பிரித்தானிய விஞ்ஞானிகள், 54 முதல் 84 வயதுள்ள ஆண்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து வந்தார்கள். அவர்களின் ஆய்வுப் படி, உடலில் விற்றமின் பி சத்து போதுமான அளவிற்கு கொண்டவர்கள் முழுமையான நினைவுத்திறனுடன் இருந்தார்களாம். வேறு சிலருக்கு பி 12 மற்றும் போலேட் சத்துகள் குறைவாக இருந்தவர்கள் மறதியுடன் மனக்குழப்பம் உடையவர்களாகவும் இருந் தார்களாம்.

பி விற்றமினைச் சேர்ந்த இந்த மூன்று விற்றமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாக செய்திகளை அனுப்பி, மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் பணியாற்ற உதவுகிறது. மூளைக்கு இந்த விற்றமின்கள் குறையும் போது தீய அமி லங்கள் மூளைக்கு மிகப் மெதுவாக எடுத்துச் செல்கின்றன. இதனால் மூளை குழப்பமடைகிறது. தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் தாமதிக்கிறது. அதன் செயல் பாட்டிலும் குழப்பம் நீடிக்கிறது.

இறுதியாக ஒன்றை சொல்லவேண்டும். மதிய உணவில் தயிர் சாதமும்,கீரையும் இருந்தால் இந்த விற்றமின்கள் நன்கு எம் முடைய உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக செயல்படும்.

டொக்டர். எம்.குணசேகரன்

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04