“சில்­ல­றைத்­த­ன­மாக அர­சியல் செய்­வோ­ருக்கு அஞ்­சு­ப­வ­ராக கிழக்கு முத­ல­மைச்சர் இருக்­க­மாட்டார்”

19 Nov, 2015 | 02:18 PM
image

கிழக்கு மாகா­ணத்தில் அர­சி­யல்­வா­தி­களின் எண்­ணிக்கை கூடிக்­கொண்டே செல்­கி­றது. ஆனால் மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு எவரும் இல்­லா­த ­நி­லை­யே காணப்­ப­டு­கி­றது என்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் நிகழ்வு ஒன்றில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்:


மக்கள் ஆத­ர­வ­ளிக்­கா­விட்­டாலும் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோரின் கால் கையைப் பிடித்து பத­விகள் பெற்று வந்து மீண்டும் மீண்டும் தங்­களை வளர்ப்­ப­தி­லேயும் திறமாய் இயங்கும் அர­சி­யல்­வா­தி­களைப் பற்றி அவ­தூறு பேசு­வ­தி­லே­யுமே  இன்று சில அர­சி­யல்­வா­திகள் உள்­ளனர். இது அவர்­களின் அர­சியல் வங்­கு­ரோத்து நிலை­யையே எடுத்­துக்­காட்­டு­கி­றது இன்று கிழக்கு மாகா­ணத்தை இலங்கை வர­லாற்றில் ஒரு எடுத்­துக்­காட்­டான மாகா­ண­மாக மாற்­ற­வேண்டும் என்று சேவைகள் செய்து கொண்டு வரு­கிறோம். இங்கு வாழும் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ­வேண்டும் அவர்­க­ளுக்­கான சேவைகள் விகி­தா­சார முறையில் வழங்­கப்­பட்டு சரி­யான வேலை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதற்­காக எமது அமைச்­சர்கள் உறு­தி­யுடன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­ன்றனர்.


ஆனால் தங்­களால் எதுவும் செய்ய முடி­யாமல் மக்கள் சேவைக்­காக ஒதுக்­கப்­படும் நிதி­களில் கொள்­ளை­ய­டித்து தன்­னையும் தன் குடும்­பத்­தையும் வளர்த்­துக்­கொண்ட சில அர­சி­யல்­வா­திகள் கிழக்கு முத­ல­மைச்­சரின் நிலை­மையைக் கண்டு அதிர்ச்­சிக்­குள்­ளாகி எங்கே எதனைப் பேசு­வ­தென்று தெரி­யாமல் உள­றித்­தி­ரி­வ­தனை பல ஊட­கங்­களில் காணக்­கி­டைக்­கி­றது.


சில்­ல­றைத்­த­ன­மாக அர­சியல் செய்­வோ­ருக்கு ஒரு­போதும் அஞ்சும் முத­ல­மைச்­ச­ராக கிழக்கு முத­ல­மைச்சர் இருக்க மாட்டார்.


கடந்த பல ஆண்­டு­க­ளாக அர­சியல் செய்யும் இவர்­களால் கிழக்கு மக்கள் கண்ட பலன்கள் என்ன? இன்று  பட்­ட­தா­ரிகள் தொடங்கி,  ஊழி­யர்கள் வரை ஏரா­ள­மான இளைஞர், யுவ­திகள் எந்த தொழில் வாய்ப்பும் இல்­லாமல் இரண்டு இலட்­சத்­துக்கு மேற்­பட்டோர் ஆர்ப்­பாட்டம், போராட்டம் என்று செய்­கின்­றனர்.


எனவே இதற்­கெல்லாம் பொறுப்­புக்­கூற வேண்­டிய இவர்கள் எனது சேவை­யினைப் பார்த்து பொறாமை பிடித்து உள­றித்­தி­ரி­வ­தற்கு மக்­கள்தான் பதில் கூற வேண்டும் என்றார்
என் ஆட்­சிக்­கா­லத்தில் கிழக்கில் பெரும் புரட்­சியை ஏற்­ப­டுத்தி விட்டே ஓய்வு பெறுவேன். மக்களின் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் ஒரு முதலமைச்சராக கிழக்கு முதலமைச்சர் செயற்படுவார். செயற்படுகிறார் என்பதனை இப்படியான கேவலம் கெட்ட அரசியல் செய்வோர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43