சமீப காலமாக  கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன.

 அந்த வகையில் இன்று அதிகாலை மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை  அழைத்து அவரை  கத்திமுனையில் வைத்துக்கொள்ளையில் ஈடுபட்டபோது அயல் வீடுகளிருந்து சத்தங்கள் எழுப்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

அயலவர்கள் விரட்டிசென்று உந்துருளியை பிடித்தபோது அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களான வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் உந்துருளியையும் விட்டு தப்பிசென்றுள்ளார்கள்.

இது தொடர்பாக பன்னங்கண்டி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தபோது, பல மணிநேரம் கழித்தே அப் பகுதிக்கு பொலிஸார் வருகைதந்தமையால் கிராமமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயப்பொருட்களை கொண்டு சென்றுள்ளார்கள். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.