பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 4 குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தையை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்த 57 வயதான முஹம்மது அய்யூப் என்பவர் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அய்யூப் கடந்த 25ஆம் திகதி மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை கோடரியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்த கொடூர தாக்குதலில் 14 வயதான அலி ஷான், 10 வயதான நாடியா, 9 வயதான இஷா மற்றும் 8  வயதான ஐமென் ஆகிய 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் கதறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் முஹம்மது அயூபை பிடித்து பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

குற்றவாளியான தந்தையை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்து பொலிஸார்  விசாரணை செய்து வருகின்றனர்.