முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்று காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for உதயங்க வீரதுங்க virakesari

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்காரவை வீரகேசரி இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது தற்போதைக்கு உத்தியோக பூர்வமாக அவ்வாறான தகவல் ஒன்று கிடைக்கவில்லை எனவும் அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சியுடன் பேச்சுகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வ தகவல் கிடைத்தவுடன் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை விமானப் படைக்கு மிக் விமான (MiG-27) கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான அனைத்துலக பிடியாணை நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.