உடல் எடையை குறைக்கும் நவீன சிகிச்சை முறை

Published By: Robert

15 Feb, 2016 | 11:49 AM
image

இன்றைய திகதியில் அழகு என்பது சமூகம் சார்ந்து இயங்கும் ஒவ்வொருவரின் தன்னம்பிக்கையின் அடையாளச்சின்னமாக மாறிவிட்டது. அவரவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப அழகியலுடன் தோற்றம் தரு வதற்கே முக்கியத்தும் கொடுக்கின்றனர். அதுவும் அறிவியல் ரீதியான சிகிச்சைகளின் மூலமே அது சாத்தியப்படவேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்நிலையில் தோல், முகம், உடல் ஆகியவற்றில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு சிகிச்சையளித்து தீர்வு தந்து, நோயாளிகளின் முகத்தில் மகிழ்ச்சியை வர வழைப்பதில் தன்னிகரில்லாமல் பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த க்ளோ ஸ்கின் கிளினிக் என்ற மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், தோல் மருத்துவ சிகிச்சை நிபுண ருமான டொக்டர். டொக்டர்.M.குமரேசனை அவரது மருத்துவமனையில் சந் தித்து உரையாடினோம்.

தற்போது மக்கள் தோலைப் பாதுகாக்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கேத் தெரியாமல் தோலில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்களே.. அது குறித்து..?

ஏராளமான தவறுகளை செய்கிறார்கள்.ஸ்டீ ராய்ட்களையும், ஸ்டீராய்ட்கள் கலக்கப்பட்ட கிறீம்களையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக முகத்திற்கு பயன்படுத்தும் கிறீம் களைச் சொல்லலாம். இதனை பயன்படுத்தத் தொடங்கும் போது நல்ல விளைவுகளையும், செல்ல செல்ல பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதே போல் அழகு நிலை யங்களில் பயன்படுத்தும் கிறீம்களின் எக்ஸ் பயரி டேட்டோ, அதன் தரம் குறித்தோ, அதில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனப் பொருள்கள் பற்றிய விவரங்களோ எமக்கு தெரியாது. அதை நாம் கேட்பதும் இல்லை. அவர்களும் சொல்வதில்லை. இருந்தாலும் பயன்படுத்துகிறோம். பின்னால் அவஸ்தையடைகிறோம். தோலை சிதைத்துக் கொண்ட பின் தோல் மருத்துவரை நாடி செல்கிறோம்.

முகத்தில் தோன்றும் பருக்கள், தழும்புகள், அம்மை வடுக்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பிரத்தியேகமான சிகிச்சைகள் இருக்கின்றன. ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றவர் களுக்கு பொருந்தாது. அவர் களின் சருமத்தன்மையைப் பொறுத்து சிகிச்சை அமையும், அதனால் இதற்குரிய தோல் மருத்துவ நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவதே சிறந்தது. பாதுகாப்பானது.

உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுவதற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் நவீன சிகிச்சைகள் குறித்து..?

தற்போது உடலில் தேவையற்ற கொழுப்பு களை அகற்ற கிரிப்டோ லைபோசன்ஷன் அல்லது கிறியோலிப்போலிஸிஸ் எனப்படும் நவீன சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் தோலின் உட்பகுதியில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் லேசர் கதிர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, வியர்வையுடன் வெளி யேற்றப்படுகிறது. இதனால் தோலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. செல்களுக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்புடன் பின்விளைவுகள் ஏதுமின்றி இவை மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நீங்கள் தோல் மருத்துவ நிபுணரைத்தான் அணுகவேண்டும். மேலும் இத்தகைய சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்களின் அறிவுரைப்படி வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடையை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டவேண்டும்.

ஒரு சிலருக்கு திடிரென்று தோன்றும் வெண்புள்ளிகள், வெண்குட்ட நோய் போன்ற வற்றிக்கான தீர்வு என்ன?

முதலில் அவர்களை பரிசோதித்து, இது பரம்பரையினால் வருகிறதா என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அதனையடுத்து பாதிப்பின் வீரியம் மற்றும் தன்மையை ஆராயவேண்டும். அதற்கு பின்னர் தான் சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். மேலும் இதற்கு தொடர்ச்சியாகவும், நிலையை கண்காணித்து கூட்டாகவும் சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். இதற்கு நோயாளிகளின் முழு ஒத்துழைப்பு தேவை. ஒத்துழைப்பு இருந்தால், இத்தகைய பாதிப்புகளை 99 சதவீதத்திற்கு குணமாக்க இயலும்.

அதே போல் இன்றைய இளந்தலைமுறை யினர் பலர் தலைமுடியிழப்பை சந்திக்கிறார்கள். இழந்த முடியை மீண்டும் உருவாக்க இயலாது என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் தலைமுடியிழப்பிற்கு எம்மாதிரியான சிகிச்சை பலன ளிக்கும்?

ஒரு சிலர் தற்போது எம்மை தொலை பேசியில் அழைத்து, டொக்டர் சார், ஹெல்மெட் போடுவதால் ஹேர்லாஸ் ஆகுமா? என கேட் கிறார்கள்.

ஹெல்மெட் போட்டு வாகனத்தை ஓட்டுவதால் தலைமுடி கொட்டாது. ஆனால் நீங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது தலைமுடிக்கு தேவையான எண் ணெயை பூசிக்கொள்ளாமலிருந்தாலோ தலை முடியிழப்பை கட்டுப்படுத்த இயலாது. அதே போல தலைமுடியை மீண்டும் வளரவைக்கலாம். ஆனால் அதற்கு பல கட்ட பரிசோதனைகள் செய்த பிறகே சாத்தியமா? என்பதை மருத்துவர்கள் எடுத்துரைப்பர். அது ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் பொறுத்து அமையும். இவ்விடயத்தில் ஒரு பொதுவான தன்மையில் பதிலளிக்க இயலாது.

முடியிழப்பிற்கு பாரம்பரியம், மன உளைச்சல், ஹார்மோன் கோளாறுகள், செய்யும் தொழில் சார்ந்து முடியிழப்பு ஆகிய பல காரணங்கள் உள்ளன. தலைமுடியின் ஆரோக்கியம், அதன் அடர்த்தி, தலைமுடியின் வேர்ப்பகுதியின் ஈரப்பதம் ஆகியவற்றை குறித்து பரி சோதிப்போம். பரிசோதனையின் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கிறோம். பி ஆர் பி என்கிற ஸ்டெம்செல் தெரபி, ரீஜெண்ட் பி ஆர் பி, லேசர் தெரபி, மைக்ரோ நீடிலிங் போன்ற நவீன சிகிச்சைகளை பயன்படுத்தி தீர்வு தருகிறோம். இம்ப்ளாண்ட், டிரான்ஸ்ஃபர் போன்ற சிகிச்சைகளை வழங்கி தலைமுடியின் வேர் பகுதியை உயிர்ப்பிக்கிறோம். அதன் பின் ஒன்பதாவது மாதம் முதல் தலைமுடி வளருவதை காணலாம். வேறு சிலருக்கு ஹோ லே சிஸ்டம் என்ற நவீன தொழில்நுட்பம் மூலமாகவும் தீர்வு வழங்குகிறோம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்: 0091 9344107817 மற்றும் மின்னஞ்சல் முகவரி: drkumaresan@glowskinclinic.in

சந்திப்பு: பரத்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29