ஐ.தே.க. எமக்கு துரோகம் இழைத்துள்ளது ; பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் ; த.மு.கூ.

Published By: Priyatharshan

27 Mar, 2018 | 09:49 AM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற போதிலும் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் இழைப்பதால் பேச்சுவார்த்தை  நடத்தி விட்டு முடிவு ஒன்றை எடுக்க நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எங்கள் கட்சிக்கும், அந்தக் கட்சிக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. உள்ளுராட்சி தேர்தலின் பொழுது பல இடங்களில் உறுதியளிக்கப்பட்ட பட்டியலின் அங்கத்துவங்கள் தாராமல் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்துள்ளது.

கொழும்பில் மட்டுமல்லாது நுவரெலியாவிலும் இரண்டு, மூன்று ஆசனங்களை எங்களுக்கு தராமல் ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றியுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் கூற வேண்டும். உரிய பதில் கிடைத்தால் மாத்திரமே நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானிப்போம்.

ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையை பயன்படுத்திக் கொண்டு கீழ்தரமாக கொள்கை மாறி பணத்திற்கு விலை போய், பதவிக்கு விலை போய் நடக்கும் ஒரு கொள்கை எம் கட்சிக்கு கிடையாது.

அதேபோல் இவ்வாறான நல்ல சிந்தனை, நல்ல கொள்கை, நல்ல எண்ணம், கௌரவமான நடத்தை ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இருக்க வேண்டும். அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31