துமிந்­தவின் மேன்­மு­றை­யீடு இன்று மீண்டும் விசா­ரணைக்கு

Published By: Robert

27 Mar, 2018 | 08:41 AM
image

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாரத லக் ஷ்மன் பிரே­ம­ச்சந்திர உள்­ளிட்ட நால்வர் கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு மரண தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ள, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐந்து குற்­ற­வா­ளிகள், குறித்த தண்­ட­னையில் இருந்து தம்மை விடு­விக்கக் கோரி தாக்கல் செய்­துள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணை இன்று வரை ஒத்திவைக்­கப்­பட்­டுள்­ளது.  

நேற்­றைய தினம் இந்த பிணைமனுகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டபோதே இன்று மீள வும் அவற்றை விசா­ர­ணைக்கு எடுக்க தீர்­மானித்து உயர் நீதி­மன்றம் வழக்கை ஒத்தி வைத்­தது.

பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மையில் நீதி­யர­சர்­க­ளான புவ­னேக அளு­வி­ஹார, பிரி­யந்த ஜய­வர்­தன, நளின் பெரேரா மற்றும் விஜித் மலல்­கொட ஆகியோர் அடங்­கிய ஐவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு முன்­னி­லை­யி­லேயே இந்த மனுக்களை விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்டு இன்று வரை ஒத்தி வைக்­கப்­பட்­டது.

மேன் முறை­யீடு செய்­துள்ள குற்­ற­வா­ளி­களில் ஒரு­வ­ரான துமிந்த சில்வா சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா,மேல் நீதி­மன்றில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­களின்  போது முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணா­னவை என குறிப்­பிட்டார். 

அதனால் தனது சேவை பெறு­ந­ருக்கு அளிக்­கப்­பட்ட தண்­டனை அசா­தா­ர­ண­மா­னது என அவர் குறிப்­பிட்டார். மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழுவின் பெரும்­பான்­மைக்கு அமைய சாட்­சிகள் முரண்­பாட்­டுக்கு மத்­தியில் தனது சேவை பெறு­ந­ருக்கு வழங்­கப்­பட்ட தண்­டனை சட்­டத்­துக்கு முர­ணா­னது என அவர் குறிப்­பிட்டார். அதனால் துமிந்த சில்வா உள்­ளிட்ட தனது சேவை பெறு­நர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் இருந்து அவர்களை விடுதலை செய்து, தண்டனையில் இருந்தும் முற்றாக விடுவிக்க வேண்டும் என அவர் கோரினார். இந் நிலையிலேயே இந்த மனுக்கள் இன்று மீள விசாரணைக்கு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47