மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகளும் அதனை ஏற்றிச் சென்ற வாகனமும் வவுணதீவு பொலிஸாரால் நேற்று  மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ரி.நஸீர் தெரிவித்தார்.

படுவான்கரை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி குறித்த மாடுகள் வாகனத்தில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட வேளையில்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவ் விடயம் தொடர்பில் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

படுவான்கரை பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக காத்தான்குடி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு கால் நடைகள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.